சதுரங்கக் கழகம்
255 அங்கத்தவர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இக்கழகமானது யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற போட்டிகளில் பங்கு பற்றி வரகின்றது. யாழ்.தினக்குரல் பத்திரிகை HNB வங்கியுடன் இணைந்து நடாத்திய தனிநபர் போட்டியில் இவ்வருடமும் எமது மாணவர்கள் ஒரு முதலாமிடத்தையும் இரண்டு 2ஆம் இடத்தையும் 4 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். இந்த வருடமும் நூற்றாண்டையொட்டி மக்கள் வங்கி சுன்னாகக்கிளையின் அனுசரணையுடன் தினக்குரல் பத்திரிகையின் விளம்பர அனுசரணையுடன் வலிகாம வலய பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட தனிநபர் சதுரங்கப் போட்டிகளில் எமது பாடசாலை பல இடங்களை பெற்று முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்படும் போட்டிகளில் பத்தொன்பது வயதுக்குட்பட்ட பெண்கள் அணி தொடர்ந்து 10 வருடங்களாக வலிகாமத்தில் 1ஆம் இடத்தையும் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி தொடர்ந்து 5 வருடங்களாக வலிகாமத்தில் 1ஆம் இடத்தையும் பெற்று வருகின்றது.
இந்த வருடமும் 19 வயதின் கீழ் பெண்கள், 15 வயதின் கீழ் ஆண்கள் வலயமட்டத்தில் முதலாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 3ஆம் இடத்தையும் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியினர் வலய மட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுளனர். பொறுப்பாசிரியர்களாக திரு.ம.மணிசேகரனும், உதவிப் பொறுப்பாசிரியர்களாக திரு.க வாணிமுகுந்தனும், செல்வி.கு.அஜிராணியும் தொழிற்படுகின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்கள்.