Past Principals


Pavalar

Mr.T.A.
Thuraiappapillai

      


Mr.K.Chinnappah

 


Mr.T.Jayaratnam


Mr.M.Makadevan


Mr.P.Kumarasamy


S.Sivasubramaniam


Mr.P.
Kanagasabapathy


Mr.A.Ramasaamy


BiramaSri.K.
Rathneswaraiyar


Mr.P.Somasundaram


Mr.T.
Shanmugasuntharam


Mr.V.Kanthaiya


Mr.K.Nagaraja


Mr.P.Suntharalingam


Mrs.S.
Ananthasayanan


Mr.K.Velsivananthan

மகாஜனாவின் மறக்கமுடியாத சாதனை மன்னர்கள்

 

சாதனை மன்னன் T.P

மகாஜனாவின் மறக்கமுடியாத சாதனை மன்னனாக அமரர் T.பத்மநாதன் அவர்கள் திகழ்கின்றார். மகாஜன உதைபந்தாட்டத்தின் பிதாமகனாகவே அவர் போற்றப்பட வேண்டும். உதைப்பந்தாட்ட வெற்றியின் ஊடாக யாழ். மாவட்டத்தையும் தாண்டி  அகில இலங்கையில் மகாஜனாவின் புகழை நிலைநாட்டியவர். இந்தச் சாதனையாளர் மகாஜன நூற்றாண்டில் போற்றப் பட்டு நினைவுகூரப்பட வேண்டியவர்.

கல்வியிலும் கவின்கலைகளிலும் விளையாட்டுதுறையிலும் யாழ். மாவட்டத்தில் மட்டுமல்ல அகில இலங்கையிலும் முன்னணிப் பாடசாலை யாக மகாஜனா திகழ்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவற்றுக்கெல்லாம் மூலகர்த் தாவாக விளங்கியவர் மகாஜன சிற்பி அமரர் தெ.து. ஜயரத்தினம் அவர்கள் ஆவார். கல்லூரி சகல செயற்பாடுகளிலும் முன்னிலையில் நிற்க வேண்டும் என்று அயராது உழைத்தார். அதற்காக ஒவ்வொருவரையும் சுண்டிப் பார்த்துத் தெரிவு செய்தார். அந்த வகையில் விளையாட்டுத் துறையில் உதைபந்தாட்டத்திற்காக சிற்பி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜாம்பவான் தான் அமரர் T.பத்மநாதன் அவர்கள்.

மகாஜனாவில் ஒரு நூலகராக இணைந்து கொண்ட T.P அவர்கள் நாள் முழுவதும் உதைபந்தாட்டம் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார். அவருக்கு உதைபந்தாட்டம் என்பது கைவந்த கலை ஆகும். உதைபந்தாட்ட களநிலைகளில்புதிய உத்திகளைக் கையாண்டவர். எதிரணிகளின் பலம், பலவீனங்களுக்கு ஏற்றவாறும் ஆட்ட மைதானத்திற்கு ஏற்றவாறும் பயிற்சியளிக்கக் கூடிய நுட்பவியலாளர். எதிரணிகளின் பலம், பலவீனங்களைக் கணி;த்து அதனூடக வெற்றிப் பாதைக்குச் சென்றவர். மிகவும் மதிநுட்பமான முறையில் அணிகளைப் பயிற்றுவிக்கும் அபாரமான ஆற்றல் படைத்தவர்.

இவரது உதைபந்தாட்ட பயிற்றுவிப்புக் காலத்தில் மகாஜனா தொடர்ந்து எட்டு வருடங்கள் யாழ். மாவட்டத்தில் சம்பியனாக வந்தமை பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சாதனையாகும். யாழ் மாவட்டப் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் மகாஜனா முதல் அணி 1967ஆம் ஆண்டு தொடக்கம் 1974ஆம் ஆண்டுவரை சம்பியனாக வந்து சாதனை படைத்தது.

யாழ். மாவட்டத்தில் மட்டுமல்லாது அகில இலங்கையிலும் உதை பந்தாட்டத்தில் மகாஜனாவின் சாதனையைப் பதிய வைத்தவர் T.P அவர்கள். 1971இல் அகில இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சங்கத்தால்நடாத்தப்பட்ட சார். ஜோன்ராபாற் வெற்றிக் கேடயத்திற்கான போட்டியில் முதற்பிரிவு வீரர்கள் சம்பியனாக வந்தனர். மேலும் 1978இல் அகில இலங்கைப் பாடசாலைகளுக் கிடையே நடைபெற்ற சிங்கா வெற்றிக் கேடயத்திற்கான உதைபந்தாட்டப் போட்டியிலும் முதற்பிரிவு அணி சம்பியனாக திகழ்ந்தது.இந்த வெற்றிகளுக்கெல்லாம் மூல காரணமாகத் திகழ்ந்தவர் T.P அவர்களே.

T.P அவர்கள் உதைபந்தாட்டத்தில் மட்டுமன்றி ஹொக்கி, கிரிக்கட், மெய்வல்லுனர் ஆகிய விளையாட்டுக்களிலும் தன்னிடமிருந்த திறமைகளைக் கொண்டுபயிற்சிகளை வழங்கியவர். T.P அவர்கள் ஒவ்வொரு வீரர்களின் உடலமைப்புகளைக் கொண்டுஆட்டக்கள நிலைகளுக்கேற்றவாறு பயிற்றுவிக்கக் கூடியவர்.மிகவும் கடுமையான போட்டிகளைக் கொண்ட ஆட்டங்களில் புதிய வீரர்களை களமிறக்கி வெற்றிகளைச் சுவைத்தவர். மகாஜனாவின் ஒவ்வொரு உதைபந்தாட்ட வெற்றிகளிலும் T.P அவர்களின் மதிநுட்பம் முக்கிய பங்காற்றும். ஆட்டத்திறன் குறைந்த அணிகளையும் எதிரணிகளின் பலவீனங்களைப் பயன்படுத்தி வயூகங்கள் அமைத்து வெற்றி பெறச் செய்வதற்கு அவருக்கு நிகர் அவரே.

T.P அவர்களிடம் பயிற்சி பெற்ற மகாஜனன்கள் இன்று உள்நாடு, வெளிநாடுகளில் எல்லாம் பரந்து வாழ்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் T.P என்ற நாமத்தை என்றும் மறக்க மாட்டாhகள். T.P அவர்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இன்றும் அவர் மீது வைத்துள்ள பக்தியைக் கண்கூடாகக் காண்கின்றோம். மகாஜனாவின் உதைபந்தாட்டத்துறை வரலாற்றில் T.P என்ற நாமம் மங்காது துலங்கிக் கொண்டே இருக்கும். அவரது புகழ் மகாஜனாவை விட்டு என்றுமே அகலாது.

உதைபந்தாட்ட பயிற்றுவிப்பில் முடிசூட மன்னனாக திகழ்ந்து மகாஜனாவின் புகழை அகில இலங்கை எங்கும் பரப்பி வைத்த T.பத்மநாதன் அவர்களை நூற்றாண்டில் நினைவு கூர்ந்து நன்றி செலுத்திப் போற்றுவோம்.

 

 

 

சாதனை மன்னன் றொஹான்

 

மகாஜனக் கல்லூரி விளையாட்டுத் துறையின் காவிய நாயகனாக அமரர் இராசநாயகம் றொஹான் இராஜசிங்கம் அவர்கள் விளங்குகின்றார். இவர் மகாஜனாவின் சகலதுறை விளையாட்டு நாயகனாகவே விளையாட்டு நாயகனாகவே மிளிர்ந்தார். கல்லூரியிப் பருவம் தொடக்கம் விளையாட்டு அதிகாரி வரை அசாத்திய திறமை கொண்டவராகவும் வித்தியாசமான சிந்தை கொண்டவராகவும் வாழ்ந்தார். மகாஜனாவின் நூற்றாண்டு காலத்தில் பெருமையுடன் நினைவு கூரப்பட வேண்டிய ஒருவர்.

18.03.1958இல் அக்கரைப்பற்றில் பிறந்த றொஹான் அவர்கள் 1967இல் தந்தையாரின் சொந்தக் கிராமமான தெல்லிப்பழை கிழக்கில் நிரந்தரமாகக் குடியமர்ந்தார். அவ்வருடமே றொஹான் அவர்கள் தனது இலட்சியப் பயணத்தினை மகாஜனாவில் கல்விகற்கத் தொடங்கியதன் மூலம் ஆரம்பித்தார். றொஹான் அவர்களின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கியவர் மகாஜன உதைபந்தாட்டப் பேராசான் அமரர் T.P பத்மநாதன் அவர்களே. உடல் தகுதிகளுக்கு ஏற்றவாறு றொஹான் அவர்களை மிளிர வைத்தவர் இந்தப் பெருந்தகையே வர்த்தகத்துறையில் ஈடுபட்டிருந்த றொஹான் அவர்களை அவருடைய விளையாட்டுத்துறை எனும் இலட்சியப் பாதைக்குள் வழிப்படுத்தி விட்டவரும் இவரே. இந்த நன்றிக்கடனுக்கும் குரு மரியாதைக்கும் தான் எழுதிய தடகள அடிப்படை நுட்பங்கள் எனும் கற்பித்தல் வழிகாட்டி நூலினை அமரர் T.பத்மநாதன் அவர்களுக்கு றொஹான் அவர்கள் சமர்ப்பணம் செய்துள்ளார்.

றொஹான் அவர்கள் கல்லூரிப் பருவத்தில் விளையாட்டு நுட்பங்களை எளிதாகக் கற்றுத் தேர்ந்து மகாஜனாவின் காற்பந்தாட்டம் ஹொக்கி, கிரிக்கட், மெய்வல்லுநர் ஆகிய அணிகளில் இடம் பிடித்தார் மகாஜனாவின் காற்பந்தாட்டம் ஹொக்கி, கிரிக்கட், ஆகிய அணிகளுக்கு தலமை தாங்கியதோடு அவ் அணிகளில் சிறந்த வீரனுக்கான விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். இவரின் விளையாட்டுத் துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நிகழ்வு 1978 இல் தேசிய மட்டத்தில் நடைபெற்ற சிங்கர் கேடய காற்பந்தாட்டப் போட்டியில் மகாஜனா அணிக்கு தலமை தாங்கி வெற்றி விருது ( சாம்பியன் கிண்ணம்) பெற்றதாகும். இவர் தனது அசாத்திய திறமையினால் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சிரேஷ்ட அணியிலும் (1977) இலங்கைப் பாடசாலைகள் ஹொக்கி அணியிலும் (1978) இடம்பிடித்தார். இலங்கை இளைஞர் ஹொக்கி அணியில் இடம் பிடித்த இவர் பாகிஸ்தானில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் விளையாடினார். இவர் 1980 களில் இலங்கையில் ஹொக்கிப் பொட்டியில் சிறந்து விளங்கிய கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டு களகத்தில்முக்கிய வீரராக சிறந்து விளங்கினார். இவரின் விளையாட்டுத் திறமைகளுக்கு மதிப்பளித்து கொழும்பில் இயங்கிய Mc wods Ltd நிறுவனம் தன்னகத்தே இணைத்துக் கொண்டது அத்தோடு Mecantile ஹொக்கிச் சம்மேளனத்திலும் அங்கம் வகித்தார்.

1986 இல் அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து விளையாட்டுத்துறையில் அடுத்த கட்டத்திற்குள் புகுந்தார். படிப்படியாக பயிற்றுநர், செயற்றிட்ட அதிகதரி.மாவட்ட விளையாட்டு அதிகாரி எனப்பதவி உயர்வுகளைப் பெற்று தன்னலமற்ற சேவைகள் புரிந்தார். தமிழர் பிரதேசத்தில் தமிழ் மொழி மூலம் பயிற்சிகளைப் பெறுவதற்கான விளையாட்டு விஞ்ஞான வளாகம் ஒன்றினைப் பாரியளவில் நிறுவுவதற்கான முழுமுயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இந்த முயற்சியின் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். இந்த விளையாட்டு விஞ்ஞான வளாகத்தினை கிளிநெர்ச்சியில் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டதோடு அந்த பாரிய நிர்மாணப் பணிகளில் செயற்றிட்ட பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் தொழிற்பட்டார். இந்தப் பணியின் ஊடாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தலாம் என்ற இலட்சியக் கனவோடு இருந்தார்.

இவர் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக இருந்த காலப் பகுதிகளில் மகாஜனாவுக்க பயிற்றுனராகச் செயற்பட்டார். குறிப்பாக 1990களிற்குப் பிற்பட்ட காலங்களில் கல்லூரி இடம்பெயர்ந்து அவலப்பட்ட நேரத்தில் விளையாட்டுத்துறைக்கான இவரது சேவை அளப்பரியதாக இருந்தது காற்பந்து, கிரிக்கட், வலைப்பந்து, மெய்வல்லுநர் ஆகிய அனைத்து விளையாட்டுகளுக்கும் சேவை அடிப்படையில் பயிற்றுநராகச் செயற்பட்டு கல்லூரியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். 2003 இல் இருந்து மாவட்ட விளையாட்டு அதிகாரியாகப் பணிபுரியும் போதும் கல்லூரி மீதும் கொண்ட பற்றினால் அடிக்கடி கல்லூரிக்குத் தரிசிப்புகளை மேற்கொண்டு விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு வேண்டிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார். அத்தோடு விசேட பயிற்சியினையும் அளித்தார். இக் காலப்பதியில் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தில் பதவி நிலை உறுப்பினராக இருந்து கொண்டு கல்லூரி வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்களுடன் தொடர்பு கொண்டு அபிவிருத்தி நடவெடிக்கைகளை மேற்கொண்டார்.

இவர் இலங்கையிலும் இந்தியா பிறேசில் ஆகிய நாடுகளிலும் விளையாட்டுத்துறை தொடர்பான கற்றை நெறிகளையும் பயிற்சி நெறிகளையும் பெற்ற சிறப்புக்குரியவர். அத்தோடு ஜேர்மன் நாட்டுப் பயிற்சியாளர்களிடமும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற பெருமைக்குரியவர். இவர் வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தில்  செயற்றிட்ட அதிகாரியாக இருந்த காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண உதைபந்தாட்டப் பயிற்றுனராகச் செயற்பட்டு எமது பிரதேச அணியை தென்னிலங்கை அணிகளோடு போட்டியிட்டு வெற்றிபெற வழிவகுத்தவர். இவரிடம் பயிற்சிகளைப் பெற்ற ஏராளமான மாணவர்கள் இன்று பல பிரதேசங்களிலும் விளையாட்டு உத்தியோகத்தர்களாகவும் தொழிற்படுகின்றனர். அவருடைய பெயர் சொல்ல இன்று ஏராளமான வாரிசுகள் உள்ளனர்.

எமது கல்லூரியினதும் தாயகத்தினதும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த றொகான் இராஜசிங்கம் அவர்கள் கொடிய நோயினர் பாதிக்கப்பட்டு 08.02.2008 இல் எம்மை விட்டுப் பிரிந்தார். அவர் இவ்வுலகில் வாழ்வதற்க இன்னும் பல காலங்கள் உள்ளன. அச்சாத்திய திறமை படைத்தவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை என்பது றொஹான் அவர்களுக்கும் விதிவிலக்காக அமையவில்லை. மகாஜனாவின் நூற்றாண்டு காலத்தில் அவரை நினைவு கூர்ந்து விளையாட்டுத்துறை மீது பற்றுக் கொண்ட அனைவரும் அவரது இலட்சியத்திற்காக உழைப்போம்.

 

க.வசந்தரூபன்                                                                                                       (பழைய மாணவன்)                                                                                        ஆசிரியர், கனகராயன்குளம் மகாவித்தியாலயம்.

 

வெல்லுக மகாஜன மாதா

Events