மாவட்டமட்ட தடகளப்போட்டி
மாவட்டமட்ட தடகளப்போட்டியில் மகாஐனக்கல்லூரி வீரர்கள் 10 முதலாம் இடங்களையும் 2 இரண்டாம் இடங்களையும் 2 மூன்றாம் இடங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஜெனந்தன் 110M தடைதாண்டல் முதலாமிடம். 400M தடைதாண்டல் இரண்டாமிடம்.
திலக்ஸன் 110M தடைதாண்டல் முதலாமிடம். 400M தடைதாண்டல் முதலாமிடம். கோலூன்றிப்பாய்தல் மூன்றாமிடம்.
சியூசாந் தட்டெறிதல் முதலாமிடம். ஈட்டியெறிதல் முதலாமிடம்.
கிருஸ்ணா உயரம்பாய்தல் முதலாமிடம்.
அன்ரனிப்பிரசாத் கோலூன்றிப்பாய்தல் இரண்டாமிடம்.
அனித்தா கோலூன்றிப்பாய்தல் முதலாமிடம். முப்பாய்ச்சல் முதலாமிடம்.
டன்சிகா 110M தடைதாண்டல் முதலாமிடம்.
கலைவாணி தட்டெறிதல் முதலாமிடம்.
13 வயது பெண்கள் 4×100அஞ்சல் ஓட்டம் மூன்றாமிடம்.
இவ் வீர,வீராங்கனைகளுக்கு ஆசிரியர் மயில்வாகனம், ஆசிரியர் கமலமோகன் ஆகியோர் பயிற்சியளித்துவருகின்றனர். இவ் வீர,வீராங்கனைகள் மகாணமட்டப்போட்டிக்கு தயாராகிவருகின்றவேளை இவ்வெற்றி வீரர்கள அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்களால் கௌரவிக்கப்பட்டனர்
உதைபந்தாட்டம் கோட்ட மட்டம் முதலாமிடம்
தெல்லிப்பழை கல்விக் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான 18 வயது பிரிவினருக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் 24.10.2011 அன்று இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் மகாஜனக்கல்லூரியை எதிர்த்து வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் அணி மோதிக்கொண்டது. இறுதியாட்டத்தில் மகாஜனக்கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது,
கோட்ட மட்ட 16 வயது பிரிவு மகாஜனக்கல்லூரி அணி 3ம் இடத்தை பெற்றுக் கொண்டது.
[View with PicLens]
July-29
யாழ் மகாஜனக்கல்லூரியில் தரம் 09 இல் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்று வருகின்றார். மணிசேகரன் தரண்யா பிரான்ஸ் நாட்டிற்கான கல்விச்சுற்றுலாவுக்காக தெரிவாகி 04.08.2011 அன்று பிரான்ஸ் நாட்டிற்கு செல்லவுள்ளார். இலங்கை ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களில் வடமாகாணத்தைச் சேர்ந்த (முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட) இரு மாணவர்களில் யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியாக இவர் தெரிவாகியுள்ளார். அத்துடன் யாழ் மகாஜனக்கல்லூரியில் இருந்து இக்கல்விச்சுற்றுலாவுக்காக தெரிவாகிய முதல்மாணவி என்ற பெருமையையும் பெறுகின்றார். இவர் பாடசாலைக்காக போட்டிகளில் கலந்து கொண்டு வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், தேசிய, மாகாண போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சாதனைகள், ஆங்கிலப் புலமை மற்றும் தலைமைத்துவப் பண்புகள் என்பவற்றைப் பரீட்சித்து புள்ளிகளின் அடிப்படையில் தெரிவாகியுள்ளார்.
May 01
திரு.ஆ.நவரத்தினராசாவுக்கு மகாஜன அன்னையின் பிரியாவிடை விழா.
ஆரூரையா நவரத்தினராசா எல்லோராலும் செல்லமாக அத்துறு என்று அழைக்கப்படுகின்றவர். இவருக்கான மகாஜன அன்னையின் பிரியாவிடை விழாவினை இன்று யா/மகாஜனக்கல்லுாரி துரையப்பாபிள்ளை மண்டபத்தில் பாடசாலை மாணவர்கள் ஏற்ப்பாடு செய்து சிறப்பாக நடாத்தினார்கள். இன்றைய விழாவின்கதானாயகனின் கடந்த கால நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் குறும்புகள் எல்லாவற்றையும் பலர் நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள். மேலும் இவர் 1950.12.26 அன்று திரு திருமதி ஆரூரையா அன்னலட்சுமி தம்பதியினர் பெற்றெடுத்த நவரத்தினங்களில் ஒருவராவர். இவர் தரம் 5 தொடக்கம் பாடசாலைக்கல்வியை யா/மகாஜனக்கல்லுாரியிலே படித்து தொடர்ந்து 1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்காலிக கல்விசாரா ஊழியராக இப்பாடசாலையிலே கடமையாற்றினார். பின்பு 1992.01.15 அன்று இவருக்கு நிரந்தர நியமனம் வழங்ப்பட்டு தொடர்ந்து இப்பாடசாலையிலே 28 வருடங்கள் கடமையாற்றி 2010.12.26 அன்று இப்பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது பாடசாலைக்கு தன்னாலான பல சேவைகளை அர்ப்பணிப்புடன் செய்து பாடசாலைச்சமூகத்திடம் தனியிடம் பிடித்தவர் ஆவார். யா/மகாஜனக்கல்லுாரி 1991 ஆம் ஆண்டு நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற போது தன் உயிரினைப் பனையம் வைத்து பாடசாலையின் முக்கிய தரவுகளையும் நுால் நிலையப்புத்தகங்களையும் பாதுகாப்பாக எடுத்து செல்ல முன்வந்தவர்களில் ஒருவராவார்.
இவ் நிகழ்வில் இருந்து சில காட்சிகள்
April 04
உதைபந்தாட்டம் இறுதி முடிவு மகாஜனக்கல்லூரி மாவட்ட சம்பியனானது
இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்தும் 17வயதுக்குட்பட்ட யாழ்மாவட்டங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 04.04.2011 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஊர்காவற்துறை சென் மேரீஸ் கல்லூரி எதிர் மகாஜனக்கல்லூரி நடைபெற்றது. மகாஜனக் கல்லூரி 02/01 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது. மாவட்ட சம்பியனானது.
03.04.2011 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் காலிறுதி ஆட்டம் தேவரயாளி இந்துக்கல்லூரி எதிர் மகாஜனக்கல்லூரி நடைபெற்றது. 4/0 கோல்கள் அடித்து மகாஜனக் கல்லூரி வெற்றியீட்டியது.
ஜனந்தன் 01 கோல்
திலக்சன் 01 கோல்
April 03
இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்தும் 17வயதுக்குட்பட்ட யாழ்மாவட்டங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 02.04.2011 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நெல்லியடி மத்திய கல்லூரி எதிர் மகாஜனக்கல்லூரி நடைபெற்றது. ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் சமநிலை தவிர்ப்பு உதைப்பு (பனாட்டி) வழங்கப்பட்டது. மகாஜனக் கல்லூரி 03/01 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.
03.04.2011 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் காலிறுதி ஆட்டம் தேவரயாளி இந்துக்கல்லூரி எதிர் மகாஜனக்கல்லூரி நடைபெற்றது. 4/0 கோல்கள் அடித்து மகாஜனக் கல்லூரி வெற்றியீட்டியது.
ஜனந்தன் 02 கோல்கள்
துரந்தரன் 01 கோல்
திலக்சன் 01 கோல்
03.04.2011 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் அரையிறுதி ஆட்டம் நாவாந்துறை ரோமன் கத்தோலிக்கம் கல்லூரி எதிர் மகாஜனக்கல்லூரி நடைபெற்றது. 1/0 கோல்கள் அடித்து மகாஜனக் கல்லூரி வெற்றியீட்டியது.
திலக்சன் 01 கோல்
மகாஜனக்கல்லூரி அணி இறுதி ஆட்டத்திற்கு தெரிவானது. நாளை 04.04.2011 அன்று இறுதி ஆட்டம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
28 March
தவறுதலுக்கு மன்னிக்கவும், நண்பர்களின் துடுப்பாட்டம் மகாஜனக் கல்லூரி 4 விக்கட்டுகளால் வெற்றி என்பதை தவறுதலாக 5 விக்கட்டுகளால் வெற்றி என்று பிரசுரித்து இருந்தோம்.
27 March- மைதானத்தில் இருந்து பழைய மாணவன் கரன் அறிக்கை..
நண்பர்களின் துடுப்பாட்டம் மகாஜனக் கல்லூரி 4 விக்கட்டுகளால் வெற்றி
ஸ்கந்தவரோதயாக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 பந்துப்பரிமாற்றம் கொண்ட பழையமாணவர்களின் நண்பர்களின் போர். நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதயக்கல்லூரி பழைய மாணவர்கள் முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 பந்துப்பரிமாற்ற முடிவில் 320/07. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் அணி 46.1 பந்துப்பரிமாற்ற முடிவில் 321/06. மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
ஸ்கந்தவரோதயக்கல்லூரி துடுப்பாட்டம்
ஜசிதரன் 105ஓட்டங்கள் 93பந்துகள்
கபிலன் 02ஓட்டங்கள் 10பந்துகள்
சதீசன் 58ஓட்டங்கள் 47பந்துகள்
கிருஸ்ணச்சந்திரன் 30ஓட்டங்கள் 25பந்துகள்
வரேந்திரன் 55ஓட்டங்கள் ஆட்டமிழக்கவில்லை
குமாரரூபன் 01ஓட்டங்கள் 06பந்துகள்
ஜொனிற்றன் 02ஓட்டங்கள் 07பந்துகள்
சிவகுகன் 03ஓட்டங்கள் 16பந்துகள்
பிரகாஷ் 20ஓட்டங்கள் ஆட்டமிழக்கவில்லை
உதிரிகள் 44
மொத்தம் 320
மகாஜனக்கல்லூரி பந்து வீச்சு
ராஜகாந்தன் 10பந்துப்பரிமாற்றம் 42ஓட்டங்கள் 01விக்கட்டு
ரவிசங்கர் 10பந்துப்பரிமாற்றம் 56ஓட்டங்கள் 03விக்கட்டு
பிரகலாதன் 10பந்துப்பரிமாற்றம் 45ஓட்டங்கள் 02விக்கட்டு
துஷியந்தன் 04பந்துப்பரிமாற்றம் 30ஓட்டங்கள்
அருந்தவநேசன் 04பந்துப்பரிமாற்றம் 24ஓட்டங்கள்
ஜெயப்பிரியந்தன் 04பந்துப்பரிமாற்றம் 37ஓட்டங்கள்
ராமகிருஸ்ணன் 02பந்துப்பரிமாற்றம் 16ஓட்டங்கள்
ரஜீவ் 02பந்துப்பரிமாற்றம் 18ஓட்டங்கள்
வசிகரன் 04பந்துப்பரிமாற்றம் 24ஓட்டங்கள்
மகாஜனக்கல்லூரி துடுப்பாட்டம்
ராமகிருஸ்ணன் 00ஓட்டங்கள்
ரஜீவ் 04ஓட்டங்கள்
துஷியந்தன் 13ஓட்டங்கள்
ஜெயப்பிரியந்தன் 66ஓட்டங்கள்
ரவிசங்கர் 60ஓட்டங்கள்
வசிகரன் 88ஓட்டங்கள்
பிரகலாதன் 30ஓட்டங்கள் ஆட்டமிழக்கவில்லை
ராஜகாந்தன் 01ஓட்டங்கள் ஆட்டமிழக்கவில்லை
அருந்தவநேசன்
குமரன்
வசந்தரூபன்
உதிரிகள் 59
மொத்தம் 321
ஸ்கந்தவரோதயக்கல்லூரி பந்து வீச்சு
ஜொனிற்றன் 7.1பந்துப்பரிமாற்றம் 45ஓட்டங்கள் 02விக்கட்டு
கிருஸ்ணச்சந்திரன் 09பந்துப்பரிமாற்றம் 42ஓட்டங்கள் 02விக்கட்டு
சிவகுகன் 04பந்துப்பரிமாற்றம் 26ஓட்டங்கள் 01விக்கட்டு
சதீசன் 04பந்துப்பரிமாற்றம் 38ஓட்டங்கள்
குமாரரூபன் 08பந்துப்பரிமாற்றம் 63ஓட்டங்கள் 01விக்கட்டு
ஜெயகிருஸ்ணா 04பந்துப்பரிமாற்றம் 13ஓட்டங்கள்
விஜயகருணன் 04பந்துப்பரிமாற்றம் 44ஓட்டங்கள்
கண்ணன் 06பந்துப்பரிமாற்றம் 35ஓட்டங்கள்
சிறந்த பந்த வீச்சாளர் ரவிசங்கர் மகாஜனக்கல்லூரி
சிறந்த துடுப்பாட்ட வீரர் ஜயசிதரன் ஸ்கந்தவரோதயக்கல்லூரி
சிறந்த சகலதுறை வீரர் ரவிசங்கர் மகாஜனக்கல்லூரி
சிறந்த களத்தடுப்பாளர் கண்ணன் ஸ்கந்தவரோதயக்கல்லூரி
ஆட்ட நாயகன் வசிகரன் மகாஜனக்கல்லூரி
20 March
நண்பர்களின் போர் துடுப்பாட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27.03.2011 அன்று ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். மகாஜனக் கல்லூரி எதிர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி பழையமாணவர்கள் அணி மோதவுள்ளது.
20 March
மைதானத்தில் இருந்து பழைய மாணவன் கரன் அறிக்கை…
வீரர்களின் துடுப்பாட்டம் 2011, மகாஜனக் கல்லூரியின் அபார வெற்றி ஒரு இன்னிங்ஸ் 24 ஓட்டங்களால் வெற்றி
நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ஸ்கந்தா அணி தலைவர் கே.புருசோத்மன் மகாஜன அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்தார். இதன் படி துடுப்பெடுத்தாட இறங்கிய மகாஜன அணி 15 ஓட்டங்களில் முதலாவது விக்கட்டையும் 38 ஓட்டங்களில் இரண்டாவது விக்கட்டையும் இழந்தது. 3ஆவது விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த கபிலனும் திலக்ஸனும் தம்மிடையே இணைப்பாட்டமாக 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலைக்கு இட்டுச்சென்றனர். திலக்ஸன் 16 ஓட்டங்களுடனும் ரி.டிலோசன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க மகாஜன அணி 134 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்தது.
இந்நிலையில் கே.கபிலனுடன் அணித்தலைவர் எஸ்.கோகிலன் 5ஆவது விக்கட்டுக்கு இணைப்பபட்டமாக 85 ஓட்டங்களை சேர்த்து கொடுக்க மகாஜன அணி வலுவான நிலையை அடைந்தது. எஸ்.கோகிலன் 5ஆவது விக்கட்டுக்கு இணைப்பாட்டமாக 85 ஓட்டங்களை சேர்த்து கொடுக்க மகாஜன அணிவலுவான நிலையை அடைந்தது. கே.கபிலன் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 98 பந்துகளில் ஒரு சிக்ஸர் 16 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்களைப் பெற்றார். எஸ்.கோகிலன் 63 பநதுகளில் ஒரு சிக்ஸர் 12 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்களைப் பெற்றார். ஜெ.ஜனந்தன் 3 பவுண்டரிகளுடன் 15 ஓட்டங்களைப் பெற்றார்.
துடுப்பாட்டம் மகாஜனாக்கல்லூரி
சூ.அஜித் 06 (09 பந்துகள்)
க.கபிலன் 104 (98 பந்துகள்)
கு.மோசிகீரன் 06 (11 பந்துகள்)
கி.திலக்ஸன் 15 (41 பந்துகள்)
த.டிலோசன் 01 (11 பந்துகள்)
ச.கோகிலன் 64 (63 பந்துகள்)
கு.வைகுந்தன் 06 (04 பந்துகள்)
பா.சஞ்சேயன் 01 (03 பந்துகள்)
ஜெ.ஜனந்தன் 15 (12 பந்துகள்)
இ.மதுசன் ஆட்டமிழக்கவில்லை
உதிரிகள் 44
மொத்தம் 267
பந்து வீச்சு ஸ்கந்தவரோதயக் கல்லூரி
எல்.குமுதன் 07 ஓவர்கள் 52 ஓட்டங்கள்
கே.புருஷோத்மன் 13 ஓவர்கள் 96 ஓட்டங்கள் 03 விக்கட்டுக்கள்
ரி.சிந்துஜன் 05 ஓவர்கள் 13 ஓட்டங்கள்
வி.ஜீவிசன் 8.4 ஓவர்கள் 28 ஓட்டங்கள் 04 விக்கட்டுக்கள்
கே.துமிசன் 02 ஓவர்கள் 20 ஓட்டங்கள் 01 விக்கட்டுக்கள்
கே.துவாரகன் 05 ஓவர்கள் 20 ஓட்டங்கள் 01 விக்கட்டுக்கள்
ரி.தாரணன் 03 ஓவர்கள் 19 ஓட்டங்கள்
எஸ்.சஞ்சயன் 02 ஓவர்கள் 17 ஓட்டங்கள்
துடுப்பாட்டம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி முதலாவது இன்னிங்ஸ்
கே.றொபேட்நிஷான் 22 (22 பந்துகள்)
கே.துமிசன் 02 (08 பந்துகள்)
தி.தாரணன் 10 (17 பந்துகள்)
எஸ்.சஞ்சயன் – (04 பந்துகள்)
ரி.சிந்துஜன் 20 (38 பந்துகள்)
கே.புருஷோத்மன் 02 (19 பந்துகள்)
வி.ஜீவிசன் 04 (19 பந்துகள்)
கே.துவாரகன் 03 (18 பந்துகள்)
ரி.நிரோஜன் – (04 பந்துகள்)
வி.லக்ஷன் 02 (04 பந்துகள்)
எல்.குமுதன் 09 ஆட்டமிழக்கவில்லை
உதிரிகள் 10
மொத்தம் 78
பந்து வீச்சு மகாஜனாக்கல்லூரி
ச.கோகிலன் 14 ஓவர்கள் 25 ஓட்டங்கள் 05 விக்கட்டுக்கள்
கு.மோசிகீரன் 11 ஓவர்கள் 37 ஓட்டங்கள் 03 விக்கட்டுக்கள்
சி.டிலக்சன் 4.4 ஓவர்கள் 12 ஓட்டங்கள் 02 விக்கட்டுக்கள்
துடுப்பாட்டம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸ்
கே.றொபேட்நிஷான் 14 (29 பந்துகள்)
தி.தாரணன் 07 (18 பந்துகள்)
கே.துமிசன் 73 (160 பந்துகள்)
எஸ்.சஞ்சயன் – (03 பந்துகள்)
ரி.சிந்துஜன் 10 (24 பந்துகள்)
கே.துவாரகன் – (09 பந்துகள்)
கே.புருஷோத்மன் 20 (36 பந்துகள்)
ர்p.நிரோஜன் 01 (03 பந்துகள்)
வி.ஜீவிசன் 14 (20 பந்துகள்)
வி.லக்ஷன் 03 (40 பந்துகள்)
எல்.குமுதன் 01 ஆட்டமிழக்கவில்லை
உதிரிகள் 22
மொத்தம் 165
பந்து வீச்சு மகாஜனாக்கல்லூரி
ச.கோகிலன் 20 ஓவர்கள் 58 ஓட்டங்கள் 04 விக்கட்டுக்கள்
ஜெ.ஜனந்தன் 03 ஓவர்கள் 09 ஓட்டங்கள்
கு.மோசிகீரன் 06 ஓவர்கள் 27 ஓட்டங்கள் 01 விக்கட்டுக்கள்
கு.வைகுந்தன் 08 ஓவர்கள் 18 ஓட்டங்கள் 02 விக்கட்டுக்கள்
சி.டிலக்சன் 11 ஓவர்கள் 30 ஓட்டங்கள் 01 விக்கட்டுக்கள்
சூ.அஜித் 8.2 ஓவர்கள் 15 ஓட்டங்கள் 02 விக்கட்டுக்கள்
சிறந்த துடுப்பாட்ட வீரர் க.கபிலன் மகாஜனக் கல்லூரி
சிறந்த பந்து வீச்சாளா ச.கோகிலன் மகாஜனக் கல்லூரி
சிறந்த சகல துறை ஆட்ட வீரன் ச.கோகிலன் மகாஜனக் கல்லூரி
சிறந்த களத்தடுப்பாளர் கே.புருஷேத்மன் ஸ்கந்தவரோதயக் கல்லூரி
சிறந்த ஆட்ட நாயகன் ச.கோகிலன் மகாஜனக் கல்லூரி
அதில் இருந்து சில காட்சிகள் ………….
19 March
மைதானத்தில் இருந்து பழைய மாணவன் கரன் அறிக்கை…
வீரர்களின் போர் முதல்நாள் ஆட்ட முடிவுகள்
நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி மகாஜனக் கல்லூரியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக்கல்லூரி அணி 267 ஓட்டங்களை குவித்தது.
க.கபிலன் – 104 ஓட்டங்கள்
ச.கோகிலன் – 64 ஓட்டங்கள்
ஸ்கந்தவரோதயக்கல்லூரி பந்து வீச்சு
வி.ஜீவிசன் – 4 விக்கட்டுகள்
கே.புருஷோத்மன் – 3 விக்ட்டுகள்
ரி.தாரணன் – 1 விக்கட்டு
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியினர் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
கே.றொபேட்நிஷான் – 22 ஓட்டங்கள்
தி.சிந்துஜன் – 20 ஓட்டங்கள்
மகாஜனக் கல்லூரி பந்து வீச்சு
ச.கோகிலன் – 5 விக்கட்டுகள்
கு.மோசிகீரன் – 3 விக்கட்டுகள்
சி.டிலக்சன் – 2 விக்கட்டுகள்
மீண்டும் ஸ்கந்தவரோதயக் கல்லூரி துடுப்பெடுத்தாடுகின்றது.
Mahajana Cricket Team
16 March
தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரிக்கு பாதுகாப்பு அமச்சரும் அவருடைய நண்பர்களினதும் நிதியுதவியால் பார்வையாளர் அரங்கு, வகுப்பறைகள், அழகியற்கூடங்கள் உள்ளடங்கிய மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் 07.03.2011 திங்கட்கிழமை காலை 10.30மணிக்கு நாட்டப்பட்டது. இன்நிகழ்வினை கல்லூரி முதல்வர் திருமதி சிவமலர் அனந்தசயனன் தலமைதாங்க பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண 51வது பிரிவுப்படையணியின் தளபதி மேயர் ஜெனரல் என் ஜெ வல்ஹம அவர்களும் மேலும் இன்நிகழ்வில் 513வது பிரிவுப்படையணியின் தளபதி பிரிகேடியர் பிபிஎஸ் டீசில்வா அவர்களும் 515 வது பிரிவுப்படையணியின் தளபதி பிரிகேடியர் பிபி றன்டெனியா அவர்களும் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாணச் செயலாளர் உயர்திரு இ. இளங்கோவன் அவர்களும் வலிகாம வலயக்கல்விப்பணிப்பாளர் திரு இராயேன்திரன் அவர்களும் தெல்லிப்பழைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு எஸ். கைலாசநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண 51வது பிரிவுப்படையணியின் தளபதி மேயர் ஜெனரல் என் ஜெ வல்ஹம அவர்களும் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாணச் செயலாளர் உயர்திரு இ. இளங்கோவன் அவர்களும் கல்லூரி முதல்வர் திருமதி சிவமலர் அனந்தசயனன் அவர்களும் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கலினைநாட்டினார்கள்.
16 March
December 2010 இல் இடம்பெற்ற க.பொ.த சாதரணதர பரீட்சை முடிவுகள் இன்று(15-03-11) மாலை வெளிவந்துள்ளன எமது கல்லூரியின் பெறுபேறுகள்.
க.பொ.த சாதரணதரம் 2010
9A – பொ.கஜவதனி
8A – சி.கஜானா 8A C
பா.சுவேந்தினி 8A C
பா.நிதர்சனா 8A C
6A – சு.சோபிகா 6A 3C
சி.மதுரா 6A 2B S
5A – சு.சோபிகா 5A B 2C S
யோ.அபிஷாயினி 5A B 2C S
4A – கி.திவ்யா 4A 2B C
த.பிரதீப் 4A 2B 2C S
ப.விஷ்ணுகீத் 4A 2B 2S
05.03.2011 அன்று மல்லாகம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வலய மட்ட 19வயது பெண்கள் அணியின் கரப்பந்தாட்ட முடிவு தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரி எதிர் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி.
மகாஜனக்கல்லூரி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி
25 07
25 14
2 நேர் செற்களில் மகாஜனாக்கல்லூரி வெற்றி பெற்றது.
இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து சில காட்சிகள்…………
கோட்ட மட்ட மென்பந்து துடுப்பாட்டத்தின் இறுதி ஆட்டம் இன்று 17-02-2011 மல்லாகம் மகாவித்தியாலய மைதானத்தில் மகாஜனாக் கல்லூரி யூனியன் கல்லூரியை எதிர்கொண்டது. இதில் மகாஜன மைந்தர்கள் 9 விக்கட்டுகளால் வெற்றியை சூடிக்கொண்டார்கள்.
யூனியன் கல்லூரி 22 / 9
பானுஜன் – 06
அனுசியன் – 03
உதிரிகள் – 06
மகாஜனக் கல்லூரி 23 / 2
திலோசன் – 09
சண்சயன் – 06
உதிரிகள் – 04
மகாஜனக் கல்லூரி 9 விக்கட்டுகளால் வென்றது.
வாழ்த்துக்கள் இளம் வீரர்களுக்கு.
17 December
06 December அன்று வெளிவந்த GCE A/L-2010 முடிவுகள், 5 மாணவர்கள் 2A B பெறுபேறுகள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள், அத்தோடு சகல துறைகளிளுமாக 30 மாணவர்கள் இவ்வருடம் பல்கலைக்கழகம் புகவுள்ளார்கள்.
15 October 2010
கல்லூரியின் நூற்றாண்டு நாளான அக்டோபர் 14 அன்று காலை 8.30 மணிக்கு விசேட அரதனையோடு ஆரம்பமாகிய விழா, பிரதமவிருந்தினர்களை வரவேற்று கொடிஏற்றத்தோடு ஸ்தாபகருக்கு மலர் அணிவித்து விருந்தினர்கள் திறந்த வெளி அரங்கிற்கு அழைத்துவரப்பட்டு, இணைப்பிரதி அதிபர் திரு.இ.துரைசிங்கம் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். அதனைத்தொடர்ந்து அதிபர் திருமதி.சிவமலர் அனந்தசயனன் தலைமையுரையை வழங்கினார்.
பிரதமவிருந்த்தினர் உரையை பழைய மாணவரும் முன்னால் தினக்குரல் பத்திரிகை ஆசிரியரும்,கருணைப்பாலத்தின் செயலாளருமான திரு.ஆ.சி. நடராஜா அவர்கள் வழங்கினார்கள். கருணைப்பாலத்திற்கு கல்லூரி சார்பாக ஸ்ரேஷ்ட மாணவ தலைவரால் ரூபா 76000 நூற்றாண்டு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. ஐக்கிய இராட்சிய பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பெற்ற மங்கள வாத்திய இசைக் கச்சேரி இடம்பெற்றது. நன்றயுரையும் கல்லூரிக்கீதத்தோடும் காலை நிகழ்வுகள் இனிதே முடிவு பெற்றன.
பின்னர் மீண்டும் மாலை 3 மணிக்கு இடம் பெற்ற நிகழ்வுகளில் முதன்மைவிருந்தினராக ஐக்கிய இராட்சிய பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.நா.சிறிகெங்காதரனும், சிறப்பு விருந்தினராக வலிகாம வலைய உதவிக்கல்விப் பணிப்பாளர்(உடற்கல்வி) திரு.மு.நடராசா அவர்களும் பங்கேற்றனர்.
�
மாணவர்களின் band வாத்தியத்தோடு விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றளோடு தேவாரம் இசைக்கப்பட்டது,அதனைத்தொடர்ந்து சின்னப்பா நினைவு நூலகம் திறந்து வைக்கப்பட்டது திரு.நா.சிறிகெங்காதரன் அவர்களால்.
விளையாட்டு நிகழ்வுகளாக அமரர் றோகான் இராஜசிங்கதின் நினைவாக துடுப்பெடுத்தாட்டம் ,கரப்பந்தாட்டம்,உதைபந்தாட்டம் போட்டிகள் இடம்பெற்றன. அதன் பின்னர் வரவேற்ப்புரை, தலைமையுரையோடு,முதன்மை விருந்தினர்,சிறப்பு விருந்தினகளின் உரையும் இடம்பெற்றது. பரிசளிப்புக்களோடு, இறுதியாக நன்றயுரையும் கல்லூரிக்கீதத்தோடும் நூற்றாண்டு நிகழ்வுகள் இனிதே முடிவு பெற்றன.
அதில் இருந்து சில காட்சிகள்…..
15 October 2010
மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டங்கள் October 12,13,14 ஆம் திகதிகளில் குதூகலமாக கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றன. தொடக்க விழாவான 12ஆம் திகதி காலை 8.30 மணிக்கு பிரதான நுழைவாயிலில் விருந்தினர் ஒன்று கூடலுடன் ஆரம்பமாகி கொடியேற்றல் நிறுவுனர் பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை அவர்களுக்கான நினைவஞ்சலியும்,
அதனைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்பற்ற மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
திறந்த வெளியரங்கினுள் வரவேற்பு இடம்பெற்று மங்கள விளக்கேற்றளோடு கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
வரவேற்புரையை பிரதி அதிபர் திரு.சு.சயந்தன் அவர்கள் ஆற்றினார்கள். அதனைத்தொடர்ந்து அதிபர் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது.
தொடர்ந்து மகாஜனன் என்னும் நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது. மற்றும் மகாஜனக்கல்லூரி நூற்றாண்டு வரலாறு அடங்கிய குறும்படம் வெளியிடப்பட்டது. முதன்மை விருந்தினர் உரையை முன்னால் அதிபர் திரு.பொன்னையா கனகசபாபதி அவர்கள் ஆற்றினார்கள்.
நன்றியுரையை நூற்றாண்டு விழாச்சபை செயலாளர் திரு.பொ.சுந்தரலிங்கம் ஆற்றி கல்லூரிகீதத்துடன் நிறைவுபெற்றது.
11 October 2010
October 10 அன்று சரஸ்வதி மண்டபத்தில் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் இறை வணக்கம், கொடிஎற்றலுடனும் மங்கள விளக்கேற்றலோடும் ஆரம்பித்து வைத்து பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு.நாகலிங்கம் சண்முகலிங்கன் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி திரு.விக்னேஸ்வரன் அவர்களும் உரை ஆற்றினார்கள்.
கல்லூரியில் இருந்து வருகை தந்திருந்த மாணவர்கள் சிறப்பாக செம்பு நாடகம் மற்றும் அரிச்சந்திரன் நாட்டிய நாடகத்தை வழங்கி மண்டபம் நிறைந்த பார்வையாளர்களை வியக்க வைத்தார்கள்.
இரவு போசனதுடன், செவிக்கு இனிமையான இன்னிசை விருந்தை இசைக்குழுவினர் வழங்கி விழாவை இனிதே முடிவு செய்தார்கள்.
அதில் இருந்து சில காட்சிகள்…..
ஜெர்மனில் வாழும் மகாஜன பழைய மாணவர்கள் ஒன்று கூடி இன்னும் சில நாட்களில் மகாஜன பழைய மாணவர் சங்கம்(ஜெர்மன்) ஆரம்பிக்கவுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
வெல்லுக மகாஜன மாதா