Past Principals


Pavalar

Mr.T.A.
Thuraiappapillai

      


Mr.K.Chinnappah

 


Mr.T.Jayaratnam


Mr.M.Makadevan


Mr.P.Kumarasamy


S.Sivasubramaniam


Mr.P.
Kanagasabapathy


Mr.A.Ramasaamy


BiramaSri.K.
Rathneswaraiyar


Mr.P.Somasundaram


Mr.T.
Shanmugasuntharam


Mr.V.Kanthaiya


Mr.K.Nagaraja


Mr.P.Suntharalingam


Mrs.S.
Ananthasayanan


Mr.K.Velsivananthan

 மகாஜனாவின் நூற்றாண்டு கால தடங்கள்

 

மகாஜன மைந்தர்களால்  வெளியிடப்பட்டு  எனது கைகளுக்குக் கிடைத்த நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றின் மூலம் மகாஜனாவின் ஆண்டு காலத்தின் வரலாற்றையும் நடந்த சிறப்பம்சங்களையும்  தொகுத்துள்ளேன். தொகுக்கும்போது சில வரலாற்றுத் தவறுகள் ஏற்படவும், சில முக்கிய நிகழ்வுகள்  விடுபடவும் இடமுண்டு. கிடைத்த  ஆவணங்களின்  படி இத்தொகுப்பு  சரியானதாக  அமையும்  என்று  நம்பி   இத்தொகுப்பினைத் தயாரித்துள்ளேன்.

ம.மணிசேகரன்
உபஅதிபர்
யா/மகாஜனக் கல்லூரி.
 

 

1910:   அமெரிக்க மிஷன் பாடசாலையுடனான  தொடர்பை  முறித்த  பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தனது வீட்டில் மகாஜன ஆங்கில  உயர்நிலைப்பள்ளிக்கு கால்கோள் விழா எடுத்தார். நா.சங்கரப்பிள்ளை, க.இலங்கை நாயகம் ஆகியோர் மிஷன் பாடசாலையில்   இருந்து  விலகி  வந்து  மகாஜனாவில்  பணியாற்றினார்கள்.

அதிபராக திரு.தெ.அ.துரையப்பாபிள்ளை பதவியேற்றால்.இதே காலப் பகுதியில்  ஆரம்பிக்கப்பட்ட இரு பாடசாலைகளான  மானிப்பாய்  இந்து பாடசாலை, கொக்குவில்   இந்து பாடசாலை என்று பெயர் வைத்த பின்பும் தெல்லிப்பழை இந்துப்பாடசாலை என்று பெயர் சூட்டாமல் “மகாஜன” என்று பெயர் சூட்டியமை யாவர்க்கும் உரியது என்ற அவரது தூரநோக்குப் பார்வை, இவரின் தனித்தன்மையைக் காட்டிநிற்கிறது.

1911:    பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்தார் பாடசாலைக்காக

1912:    இப்போது  கல்லூரி அமைந்துள்ள இடத்தில் புதிய     கட்டடத்தை நிறுவினார்.

1914:    மகாஜனாவை உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதியுமாறு வேண்டுகோளை சட்டநிரூபண சபை உறுப்பினர் சேர்.அ.கனகசபை முயற்சி எடுத்தார். அப்போதிருந்த கல்விப் பணிப்பாளர் காவாட் அதற்கு இணங்க வில்லை.

1915:    பொதுத் தேர்விற்கு தோற்ற மகாஜன மாணவர்களது அனுமதி இல்லாததால் பேரறிஞர்கள் பலரைக் கொண்ட தேர்வுச்சபை நிறுவப்பட்டது.

1916:    பொதுத் தேர்வுகளுக்குத் தோற்றும் அனுமதி வழங்கப்பட்டது. தேர்வில் சிறந்த பெறுபேறுகளும் கிடைத்தன.

1918:    பெருமழை காரணமாக பாடசாலைக் கட்டடம் தரைமட்டமானதால் மீண்டும் பாவலரது வீட்டிலே பாடசாலை நடைபெற்றது. அத்துடன் E.L.C.S  வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது.

1919:    T வடிவில் பாடசாலைப் புதிய கட்டடம் ஆரம்பிக்கப்பட்டது.

1920:    உதவி நன்கொடை வழங்கப்பட்டது.

1926:    மகாஜனாவின் ஆரம்பப்பாடசாலை தெல்லிப்பழை சரஸ்வதி கனிட்ட தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. உயர்நிலைப்பள்ளியில் அட்சர கேத்திர கணிதங்களை கற்பிக்க அனுமதி.

1928:    தெல்லிப்பழை சரஸ்வதி கனிட்ட தமிழ் கலவன் பாடசாலை பதிவு செய்யப் பட்டது.

1929:    பாவலர் அமரத்துவம் அடைந்தார்கள் (24-06-1929). அதிபராக திரு. கா.சின்னப்பா பதவியேற்றல்

1930:    அதிகார், லோடன், துரையப்பா ஆகிய இல்லங்கள் தொழிற்பட்டன என அறியப்பட்டன.

1935:    அதிபர் திரு.கா.சின்னப்பா தலைமையில் வெள்ளிவிழாக் கொண்டாடப்பட்டது. முதலாவது மகாஜனன் மலர்  வெளியிடப்பட்டது.

1936:    பாடசாலையில் சாரணியத்தை எமது நவ மகாஜன சிற்பி தெ.து. ஜயரத்தினம் ஆரம்பித்து வைத்தார்.

1941:    விஞ்ஞானக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

1943:    பெண்கள் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. சிரேட்ட  பாடசாலைத்தராதர வகுப்பில் விஞ்ஞானப் பாடங்கள் கற்பிக்கப் பட்டன.

1944:    சிரேட்ட பாடசாலைத் தராதர விஞ்ஞானப் பிரிவில் 15 மாணவர்கள் தோற்றி 12 பேர் சித்தி பெற்றனர்.

1945:    அதிபாராக திரு.தெ.து.ஜயரத்தினம் பதவியேற்றல், அதிபர் அவர்களால் ஒரு இலட்சம் ரூபா இலக்கில் கட்டட விஸ்தரிப்பிற்கான திட்டம் அங்கு சமர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

1946:    பெறப்பட்ட காணிகள் அனைத்தையும் துப்புரவபடுத்தி திருப்தியான முறை யில் வளாகம் முழுவதும் அமைப்ப தற்கான திட்டம் ஏற்பாடாகியது. தெற்குத்  திசையில் தனது சொந்தத் தேவைக்காக ஒரு வீடு ஸ்தாபகரால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின் பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு தேவையற்பட்டதால் அந்த வீடு அழித்தொழிக்கப்பட்டது. இவ்வாண்டில் முதற்தடலையாக J.S.S.A கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது. அத்துடன் வசதிக் கட்டணங்கள் மூலம் பௌதீகவியல், இரசாயனவியல்,உயிரியல் பாடங்கள் கற்பிப்பதற்கான திட்டமும் முன்னெடு க்கப்பட்டது. பழைய மாணவர் சங்கம் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

1947:    விஞ்ஞனப் பட்டதாரி ஆசிரியர்களை அமர்த்துவதற்காக இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றார். அந்த ஆண்டு மே மாதம் முதற் குழுவினர் வருகை தந்தனர். பாடசாலை இரண்டாம் தரத்திற்கு உயர்த் தப்பட்டது.

1948:    H.S.C உயர் பாடசாலை தராதர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது. சரஸ்வதி ஆரம்ப பாடசாலை கல்லூரியுடன் இணைக்கப் பட்டது. இளங்குழந்தைகளின் ; (kindergarden)  வகுப்பு முதல் பல்கலைக்கழக பிரவேச வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்டது. கூடிய மாணவர்களின் வருகையினால் பாரிய திட்டங்கள் மூலம் பல வகுப்பறைகள் ஸ்தாபிக்கப்பட்டன. பல கட்டடங்களுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

1949:    கல்லூரி முதல் தரத்திற்கு (Grade1)  உயர்த்தப்பட்டது. அதிபர் வட மாகாண ஆசிரியர் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1950:    கல்லூரிக்கு வடக்கேயிருந்த காணி வாங்கப்பட்டு மைதானம் விரிவாக்கப் பட்டது. நிதி சேர்க்கும் நோக்கத்திற்காக இந்தியாவிலிருந்து திரைப் பட நட்சத்திரங்கள் வரவழைக்கப்ப ட்டு நிதியுதவிக் காட்சிகள் நடாத்தப்பட்டது.

1951:    வித்துவான் திரு.நா.சிவபாதசுந்தரனார் அவர்களால் கல்லூரிக்கீதம், கொடிக் கீதம் இரண்டும் இயற்றப்பட்டது. பொறியியல் துறைக்கு முதல் முறையாக திரு.அ.வேல்சாமி பேரான ந்தனை பல்கலைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1952:    பௌதீக ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது. முதல் முறையாக விஞ்ஞானத் துறைக்கு திரு.S.I. சத்தியோசாதம் அவர்களும், கலைத் துறைக்கு திரு.கே.நல்லைநாதன், திரு.இ.குமாரதேவன் அவர்களும் தேர் ந்தெடுக்கப்பட்டார். கல்லூரிக்கீதத்தையும், கொடிக் கீதத்தையும் இயற்றிய வித்துவான் திரு.நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் கொழும்பில் நடைபெற்ற சாகித்திய மண்டல விழாவில் கௌரவிக்கப்பட்டார்.

1953:    இரசாயன ஆய்வு கூடம் திறக்கப் பட்டது. மேலதிக கட்டடங்கள் அமைப்பதற்காக காணி ½ ஏக்கர் மேலாகத் தேவைப்பட்து.

1954:    யாழ்ப்பாணத்தில் பாரிய அளவிலான ஒரு களியாட்ட விழா நடாத்தப் பட்டது. இதனை மாண்பு மிகு கல்வி அமைச்சர் திறந்து வைத்தார். களியாட்டவிழா ஒரு மாதமாக இடம்பெற்றது. லொத்தர் சீட்டு விற்பனையும் நடைபெற்றது. ஆனால் எதிர் பார்த்த தொகை லொத்தர் சீட்டுகள் விற்கப்படவில்லை. அதிபர் நாலா புறமும் சென்று சீட்டுகள் விற்பனை செய்து அதன் மூலம் லட்ச ரூபாய்கள் சேகரித்தார். நவீன முறையில் கல்லூரி விடுதிச் சாலை ஆரம்பிக்கப்பட்டது. இது மகாஜனக் கல்லூரிக்கு ஒரு சாதனையாகக் கருதுப்பட்டது.

1955:    துரையப்பா மண்டபம் மற்றும் நூல் நிலையம் என்பவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது பொன் விழா மண்டபம் என்று அழைக்கப்பட்டது. இதுவே துரையப்பாபிள்ளை ஞாபாகார்த்த மண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது .பழைய T உருவமைப்புக் கட்டடம் கட்டுவதற்காக அழிக்கப்பட்டது. பெரியளவிலான வேலைத்தளம் நெசவு வேலை, மரவேலைப்பயிற்சி, (தும்பு) கயிறு திரிக்கும்வேலைப்பயிற்சி, களி மண் வேலைப்பயிற்சி போன்றவற்றை பயிற்றுவிப்பதற்காக கட்டப்பட்டது. J.S.S.A உடற்பயிற்சிப் போட்டி, இரண்டாம் பிரிவு உதைபந்தாட்டப் போட்டி முதலாமிடம் கிடைத்தன.

1956:    உயிரியல் ஆய்வுகூடக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. . J.S.S.A உடற்பயிற்சிப் போட்டி, 2ம் இடம் கிடைத்தது. அதிபர் பொன் விழா மண்டபத்திற்கு நிதியுதவி பெற மலேசியாவிற்கு பயணமானார். வழி காட்டிகள், சிறு தோழிகள் இயக்கம் ஆரம்பமானது. மாவிட்டபுரம், திருக்கேதீஸ்வரத் திருவிழாக்கள் ஆரம்பிக் கப்பட்டது.

1957:    அதிபர் பெப்ரவரி மாதம் மலேசியாவிலிருந்து வெற்றிகரமான சுற்றுலாவை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். அதிபர் தன் ஆசிரியத் துறையின் வெள்ளி விழாவை இவ் வருடத்தில் சிறப்பாகக் கொண்டாடினார்.

மேலதிகமாக ஐந்து வகுப்ப றைகளும் மேலதிக அறைகளும் இவ்வருடத்தில் கட்டப்பட்டது. மூன்றாவது ஆண்டாக . J.S.S.A  உடற்பயிற்சிப் போட்டியிலும் வெற்றி யீட்டியது.

1958:    விளையாட்டு மைதானத்தின் விஸ்தரி ப்பிற்காக ½ ஏக்கர் காணி பெற்றுக் கொள்ளப்பட்டது. கிழக்குப் பக்கமாக நடன வகுப்பிற்கான அறையும் வேலைத்தளத்திற்கான அறையும் கட்டப்பட்டது.

1959:    கல்லூரியின் மேற்குத் திசையில் இரு புறமும் வகுப்பறையும் நடுவில் திறந்த வெளி அரங்கமும் அமைக்கப் பெற்றது. . J.S.S.A யால் நடாத்தப்பட்ட மத்திய கல்லூரி உடற்பயிற்சிப் போட்டியில் மூன்றா வது இடத்தைப் பெற்றது.

1960:    கல்லூரி தனது பொன் விழாவைக் கொண்டாடியது. இவ்விழா துரையப் பாபிள்ளை ஞாபா கார்த்த மண்டபத் திறப்பு விழாவுடன் ஆரம்பமானது. களியாட்ட நிகழ்வும், கல்வி சார்ந்த கண்காட்சியும் நடைபெற்றது. இதற்கு இலங்கையின் எல்லாப் பகுதியில் இருந்தும் பல பிரமுகர்கள் பங்கு பற்றினார்கள். குலாநிதி நிக்கலஸ் ஆட்டிக்கல் (உபவேந்தர் பல்கலைக் கழகம்) மாடிக்கட்டடத்தொகுதியை திறந்து வைத்தார். திரு.ஆ.குமாரசாமி அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்ட பொன்விழா மலர் வெளியிட ப்பட்டது அத்துடன் சிந்தனைச் சோலை மலர் வெளியீடும் இடம் பெற்றது.

கல்லூரியின் சிவகாமி சமேத ஆனந்த நடராசர் ஆலயம் சமயச் சடங்குகள், கிரியைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவ்வருடமே தனியார் பாடசாலை ஸ்தானத்தில் இருந்து அரசாங்க பாடசாலையாக மாற்றப்பட்டது.

அரசாங்கம் பொறுப்பேற்று முதல் தரமான பாடசாலையாக இத்தீ விலேயே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றது. நிர்வாகம் அரசாங்கத்தின் கைக்கு மாறியது. மாணவர்களின் எண்ணிக்கை 1800ஆக உயர்ந்தது.

1961:    J.S.S.A யால் நடாத்தப்பட்ட உதைபந் தாட்டப் போட்டி 2ம் பிரிவு 1ம் இடம் பெற்றது. டோக்கியோ (யப்பான்)வில் நடைபெற்ற ஆசிய சாரணர்களின் ஐம்பொறியில் எமது கல்லூரியில் மூன்று சாரணர்கள் இலங்கையின் பிரதிநிதிகளாகச் சென்று பங்கேற்ற னர். 6சாரணர்கள் ஜனாதிபதிச் சின்ன்ம் பெற்றனர். குருளைச் சாரணர் உருவாக்கம் பெற்றது.

1963:    கல்வி இலாகா நடாத்திய பெண்களுக்கான தேசிய உடற்பயிற்சிப் போட்டியில் மகா தேசாதிபதியிடம் இருந்து வெற்றிக் கிண்ணத்தை பெற்றனர். இந்த வருடத்தில் எமது பாடசாலையில் அதிக எண்ணிக்கையான 38 மாணவர்கள் இலங்கை பல்கலைக் கழகத்திற்க தெரிவாகினர். அவர்களில் 10பேர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகினர். யாழ்ப்பாண த்திலேயே இது சாதனையாகும். எமது பாடசாலை சாரண ஆசிரியர் திரு.C.S.சுப்பிரமணியம் அவர்களும் சாராணர் மு.விஸ்ணுபாலா என்பவரும் கிறீஸில் நடைபெற்ற உலக சாரண ஐம்பொறியில் இலங்கையின் பிரதிநி திகளாகச் சென்றிருந்தனர்.

1964:    J.S.S.A  உதைபந்துப் போட்டியில் முதலாம் பிரிவு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்றது. அரசாங்கம் இரண்டு வகுப்பறைக்கு நிதி வழங்கியது. அதிபர் இலங்கை தலமை ஆசிரியர்களின் மாநாட்டிற்கு மேன்மை தங்கிய காரியதரிசியாகத் தெரிவு செய்யப்பட்டார். 4சாரணர்கள் ஜனாதிபதிச் சின்னம் பெற்றனர்.

1965:    கணேசையர் விருதினை எமது மாணவர்கள் N.P.T.A நடாத்திய தமிழ் பேச்சு போட்டியில் பெற்றுக் கொண்டனர்.எமது மாணவர்கள் அதிக எண்ணிக்கையான புள்ளிகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. J.S.S.A  ஓட்டப் போட்டியில் பரிசுக ளைப் பெற்று சாதனை படைத்தது. இவ்வாண்டில் இருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் (1965-1969) கலைக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் முதலாம் இடம் பெற்றது. இதற்கு காரணமாக இருந்தவர் எமது பழைய மாணவனும் ஆசிரியருமான திரு.செ.கதிரேசம்பிள்ளை ஆவார். Jaffna Hockey Association நடாத்திய இரு பிரிவுகளிலும் 1ம்இடம் பெற்றது. 4 சாரணர்கள் ஜனாதிபதிச் சின்னம் பெற்றனர்.

1966:    இலங்கை கலாசார நிலையத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைத் தமிழ் நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றது. தொடர்ந்து 1967,1968,1969 ஆகிய மூன்றாண்டுகள் நாடக விழாவில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தது. 7மாணவர்கள் மருத்துவத் துறைக்கும், 4மாணவர் கள் பொறியியல் துறைக்கும் தெரிவானார்கள். அகில இலங்கை பாடசாலை Hockey அணிக்கு திரு.M.வாமதேவராஜா தலைவராகத் தெரிவானார்.

1967:    11பேர் ஜனாதிபதி சின்னம் பெற்றனர். உதைபந்து முதலாம் பிரிவு மாவட்ட த்தில் 1ம் இடம், தொடர்ந்து 8 ஆண்டுகள் இதனைப் பெற்றுக் கொண்டது. (1967-1974) இவ் வெற்றி களுக்குக் காரணமானவர் பயிற்றுவிப் பாளர் திரு.T.பத்மநாதன் ஆவார். 7 மாணவர்கள் மருத்துவத் துறைக்குத் தெரிவானார்கள்.

1968:    உதைபந்து முதலாம் பிரிவு மாவட்டத்தில் முதலாம் இடம்.

1969:    15 பேர் மருத்துவத பீடத்துக்குத் தெரிவாகினர். தேசிய ரீதியில் சிறந்த உதைபந்தாட்ட வீரர்களாக S.வடிவேஸ்வரன், K.மோகன்ராம், S.இராஜரட்ணம் அவர்களும் மெய்வல்லுனராக S.சிவராஜாவும், மைல் ஓட்டத்தில் K.கந்தையா வும் தெரிவாகினார்கள். Jaffna Hockey association   நடாத்திய சீனியர், யூனியர் பிரிவுகள் இரண்டிலும் எமது அணி முதலிடம் பெற்று சாம் பியன் ஆனது. வைரவிழா மண்டப த்துக்கு திரு.சு.திருஞானசம்பந்தர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

1970:    அகில இலங்கைப் பாடசாலை Hockey அணியில் உறப்பினராக பின் தலைவராக திரு.சு.மகேந்திரன் தெரிவுசெய்யப்பட்டார். 1940 – 1970 மகாஜனாவின் மும்மணிகள் மகாகவி உருத்திரமூர்த்தி, அ.செ முருகானந்தன், அ.ந.கந்தசாமி, மற்றும் செ.கதிரேசம்பிள்ளை ஆகியோர் ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்கிய ஈழத்து நவீன வரலாற்றில் மகஜனக்கலூரியின் பெயர்அழியாது இடம்பெற்றது. மேலும் இவ்வாண்டில் விஞ்ஞானப் புதிர்ப் போட்டியில் சம்பியனானது. அத்துடன் கல்லூரி தனது வைரவிழாவைக் கொண்டா டியது.

 

1971:    அதிபராக திரு.மா.மகாதேவன் பதவியேற்றல், தேசிய ரீதியில் சோ ஜோன் ராபாற் வெற்றிக் கிண்ணம் பெற்றமை உதைபந்து முதலாம் பிரிவு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்றது.

1972:    அதிபராக திரு.பொ.ச.குமாரசாமி பதவியேற்றல், உதைபந்து முதலாம் பிரிவு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்றது. செல்வன். சிவானந்தராஜா அகில இலங்கை உதைபந்தாட்டக் குழுவில் அங்கத்துவம் பெற்றார். பாவலர் நூற்றாண்டு விழா விரிவாகக் கொண்டாட ஏற்பாடாகியது (மலர் வெளியீடு, சிலை திறத்தல்)

1973:    அதிபராக திரு.கா.சிவசுப்பிரமணியம் பதவியேற்றல் செல்வன் ம.ஜெயபா லன் அகில இலங்கை ரீதியில் 1500 மீ ஓட்டம் மூன்றாம் இடம், உதைபந்து முதலாம் பிரிவு மாவட்ட த்தில் முதலாம் இடம், செல்வன் அ.மனோறஞ்சன் இலங்கைக் குழுவில் இடம் பிடித்தார்.

1974:    செல்வன் சு.ஜெயராஜா இலங்கைக் குழுவில் இடம் பிடித்தார். உதைபந்து முதலாம் பிரிவு மாவட்டத்தில் முதலாம் இடம்.

1976:    அதிபராக திரு.பொ.கனகசபாபதி பதவியேற்றல் ஜயரத்தினம் மண்டபம் கட்டப்பட்டது. பாவலர் மண்டபத்தில் சிற்பியின் திரைநீக்கம் செய்யப் பட்டது. கோவில் கும்பாவிஷேகம் நடாத்தப்பட்டது.

1977:    இலங்கை இளைஞர் ஹொக்கி அணியில் திரு.இராசநாயகம் றொகான் இடம்பிடித்தார். ஜயரத்தினம் இல்லம் 5வதாக சேர்க்கப்பட்டு விளையாட்டுப் போட்டிக்கு 5 இல்லங்கள் போட்டியிட்டன.

1978:    உதைபந்து முதலாம் பிரிவு மாவட்டத்தில் முதலாம் இடம் (சிங்க ர்கிண்ணம்) இராசநாயகம் றொஹான் தலைமை தாங்கினார். பல்லிய நிகழ்ச்சி மாவட்டம், அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்றது, மகாஜன சிற்பியின் சிலை திறப்பு, ஜயரத்தினம் வைரவிழா மண்டபம் திறப்பு, 6 சாரணர்கள் ஜனாதிபதி விருது பெற்றனர்.

1979:    அதிபர்களாக திரு.இராமசாமி, திரு.இரத்தினேஸ்வரஐயர் ஆகியோர் கடமையாற்றினார்கள்.

1980:    அதிபராக திரு.பொன்.சோமசுந்தரம் பதவியேற்றல். எமது மாணவர்களால் ‘புதுசு’ என்னும் சஞ்சிகை வெளியிட ப்பட்டது.

1983:    அதிபராக திரு.த.சண்முகசுந்தரம் பதவி யேற்றல்.

1984:    அதிபராக திரு.வே.கந்தையா பதவி யேற்றல். கோவில் கும்பாபி ஷேகம் ஆசிரியர் திரு.ச.விநாயக ரத்தினம் அவர்களின் வழிகாட்டலில் நடாத்தப்பட்டது.

1985:    அதிபராக திரு.க.நாகராசா பதவி யேற்றல்.

1986:    நடராசப்பெருமானுடன் மாணிக்கவாசகர் சிலை வைக்கப்பட்டது.

1987:    பழைய மாணவர் சங்கம் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டது.

1988:    தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட முன்மொழியப்பட்டு அங்கீக ரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

1989:    அகில இலங்கை ரீதியில் 100 மீ ஓட்டம் முதலாம் இடம் செல்வி. தில்லானா சுமங்கலியா, பழைய மாணவர் சங்கம் கனடாவில் உருவாக்கப்பட்டது.

1990:    அகில இலங்கை ரீதியில் சகல வசதி களும் கொண்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள 100 பாடசாலைகளில் மகாஜனவும் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டது, வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 பாடசாலைகளில் எமது பாடசாலை முதலிடம் பெற்றது. இந்து கலாசார அமைச்சு நடாத்திய சமய பேச்சு, கட்டுரை, பண்ணிசை போட்டிகளில் 6 தங்கப்பதக்கங்களை பெற்றது வழிகாட்டியாக அமைந்தவர் ஆசிரியர் திரு.ச.விநாயகரத்தினம் ஆவார். போர்ச் சூழலினால் பாடசாலை அருணோதயக்கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது

1991:    பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ்இல் உருவாக்கப்பட்டது. பாடசாலை     பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது. 4 சாரணர்கள் ஜனாதிபதி விருதினைப் பெற்றனர்.

1992:    க.பொ.த உயர்தர பெறுபேற்று அடிப் படையில் 30 தலை சிறந்த பாடசா லைகளில் ஒரு பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டது. செல்வி. வா.தமிழினி கணிதத்துறையில் 4A எடுத்து யாழ்மாவட்டத்தில் 2ம் இடம் பெற்றார்.

1993:  க.பொ.த உயர்தர பெறுபேற்று அடிப் படையில் 20 தலை சிறந்த பாடசா லைகளில் ஒரு பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் மாவட்டத் துள் 5 பாடசாலைகளில் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டது.

1994:  57 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாயினர். கொழும்பு பழைய மாணவர் சங்கம் மீளமைப்பு செய்யப் பெற்றது. மருதனார்மடத்தில் கொட் டகை அமைத்து பாடசாலை இயங்கத் தொடங்கியது.

1995:  போர்ச் சூழலினால் யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியமை.

1996:  மருதனார் மடத்திற்கு மீள் வருகை, சாரணியம் ஆசிரியர் திரு.க.காரளசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் வைரவிழா கொண்டாடியது. சதுரங்கப்போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்தமை போட்டிக்கான வழிகாட்டியாக ஆசிரியர் திரு.நா.காளிதாசன் செயற்பட்டார்.

1997:  க.பொ.த உயர்தர பெறுபேற்று அடிப்படையில் கலைப்பிரிவில் செல்வன். மு.ரூபவதனன் மாவட்டத்தில் 1ம் இடம் பெற்றுள்ளார். ம.லோகபரணி தேசிய வாசிப்புப் போட்டியில் 2ம் இடம் பெற்றுள்ளார்.

1998:  22 ஆண்டுகளிற்குப் பின் கல்லூரிச் சஞ்சிகையான மகாஜனன் வெளியிட பட்டது அதிபராக திரு.பொ.சுந்தரலிங்கம் பதவியேற்றல்.

1999:  பாடசாலை தெல்லிப்பழைக்கு மீள் குடியேற்றல். ஜயரத்தினம் மண்டபம், திறந்தவெளி அரங்கு இடைப்பட்ட 8 வகுப்பறைகள் UNHCR இனாலும் துரையப்பாபிள்ளை மண்டபம், ஆய்வு கூடம் என்பன RRAN உதவியாலும் ஓரளவு பாவிக்கக்கூடியதாக திருத்தி யமைக்கப்பட்டது.

2000:  பழைய மாணவர் சங்கதினால் மைதானம் திருத்தலும் OSA, SDSசால் குடிநீர் வழங்கலும் ஓரளவு செய்யப்பட்டது. சாரணியத்தில் செல்வன்கள் ஸ்ரீ.கோபிநாத், தி.செந்தில்நாதன், த.செந்தூரன், ந.ஜீவானந்தன் ஜனாதிபதி விருது பெற்றனர். பா.நீதுஜன் புலமைப்பரிசில் பரீட்சையில் 180 புள்ளி பெற்று மாவட்டத்தில் 3ம் இடம் பெற்றனர்.

2001:  19வயது ஆண்கள் கரப்பந்தாட்ட அணி வடகிழக்கு மாகாணத்தில் 1ம் இடம் பெற்ற முதல் தமிழ்ப் பாடசாலையானது. ஸ்கந்தவரோதாயாக் கல்லூரியுடனான “Battle Of The Heros” வீரர்களின்துடு ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பா.ரேகா புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளி பெற்று மாவட்டத்தில் 2ம் இடம் பெற்றார். GTZ உதவியினால் ஆண் பெண்களுக்கான நவீன மலசலகூடம் அமைக்கப்பட்டது. RRAN இன் உதவியுடன் 70X25 கீழ் மாடி ஆரம்ப வகுப்பறை அமைக்கப்பட்டது.

2002:  தமிழறிவு வினாவிடை தேசிய மட்ட த்தில் முதலிடம் பெற்றது. (செல்வன். தி.தயந்தன், செல்வன்.ப. துஸ்யந்தன், செல்வி.தி காயத்திரி, செல்வி.சு.சுகிர்தா, செல்வி.த. சுதர்சினி) இவ்வாண்டு முதல் முறை யாக தேசிய சதுரங்கப் போட்டிக்கு மாணவர்கள் பங்கு பற்றியமை. செல்வி.வை.தர்சினி தேசிய பாடசாலைகளுக்கான போட்டியில் Board Prize பெற்றுக் கொண்டார்.

சதுரங்கத்தில் செல்வன்.க.ஆதித்தன், செல்வி.வை.தர்சினி, செல்வி.மு. பாலநிதி, செல்வி.ச.சிவப்பிரியா, செல்வி.இ.மோகனசுதாஜினி தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றியதுடன் க.ஆதித்தன், சி.சிவப்பிரியா இந்தியாவில் நடைபெற்ற போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

கல்வித் திணைக்கள உதவியுடன் தரம் 1 வகுப்பறை, செயற்பாட்டறை, விவசாய  அலகும், வகுப்பறை ஒன்றும் சேர்த்து கணனி அறை ஆக்கப்பட்டது.

2003:  தமிழறிவு வினாவிடை தேசியமட்டத்தில் முதலிடம் பெற்றது. (செல்வன். செ.கயந்தன், செல்வி.சி.சிந்துபாரதி, செல்வி.ஏ.புராதனி, செல்வி.சு.சயந்தா, செல்வி.இ.சாமினி) தேசியமட்டக் கட்டுரைப் போட்டியில் செல்வி. தி.காஜத்திரி இரண்டாம் இடம் பெற்றார். அனைத்துப் பழைய மாணவர் ஒன்றிணைந்த மகாநாடு கொழும்பில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கம் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. செல்வன்.ஜெ.ஜெயந்தன், செல்வன். கா.சுஜீவன் சாரணியத்தில் ஜனாதிபதி விருதுபெற்றனர். GTZஇனால் 110×25 அடி கீழ்மாடி கட்டி வழங்கப்பட்டது. பாவலர் சிலை மீள அமைக்கப்பட்டது. சர்வதேச மகாநாடு கொழும்பில் நடாத்தப்பட்டது.

2004:    கணினிக்கூடத்திற்கு 20 கணினிகள் SEMP தரப்பட்டது NECORD உதவியுடன் T   வடிவ மாடிக்கட்டடம் கட்டப்பட்டது. UNCHR உதவியுடன் குழாய்கிணறு, நீர்த்தாங்கி அமைக்கப்பட்டது. பிரான்ஸ் OSAஆல் பவள மல்லி மலர் வெளியிடப்பட்டது. அரசாங்கத் திட்டத்தின் கீழ் தரம் 1 தொடக்கம் தரம் 9 வரையான மாணவர்களுக்கு உணவு வழங்கப் படுகின்றது. தேசிய மட்டத்தில் நடாத்திய விவாதப் போட்டிக்கு மாவட்ட அணிக்கு ஆ.அனுஷியா தலைமை தாங்கினார். இரண்டாம் இடம் பெற்றது.

2005:  சுனாமி சிறுவர் நாடகம் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திலும் பரிசு பெற்றது. சிந்தனைச் சோலை பழைய மாணவர் சங்கதினால் மீள் பதிப்புச் செய்து வெளியிடப்பட்டது.

2006:  எமது கல்லூரியில் முதலாவது பெண் அதிபராக திருமதி சிவமலர் அனந்த சயனன் பதவியேற்றல். கல்வித் திணைக்களத்தால் 162 “B” ரக மேசை, கதிரைகள் தரப்பட்டது. துரையப்பாபிள்ளை மண்டபம் நவீன ரக வசதிகளுடன் புனரமைக்கப்பட்டது. (மகிந்த சிந்தனை 1500000ரூபா) ESDFP வேலைத் திட்டம் தொடங்கப்பட்டது.

2007:  தமிழ்தின தேசியப் போட்டியில் 3 முதலிடங்கள். செல்வி.ந.அபிராமி தனிநடனம் பிரிவு-2, செல்வன். பு.திருமாறன் பேச்சு பிரிவு, செல்வன். பு.திருமாறன் பேச்சு பிரிவு-4, தமிழறிவு செல்விகள் த.மதுரா, க.ஜானி, க.விதுசா, செ.குகப்பிரியா, க.சுகன்யா, செல்வி.ம.தரண்யா. பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக ஆங்கில தின தேசிய மட்டப் போட்டியில் Recitation Grade-5 3ம் இடம் பெற்றார். இசைநாடகம் மாகாண மட்டத்தில் முதலிடம். (இதுவே இறுதிப்போட்டி).

9 ஆண்டுகளுக்குப் பின் மகாஜனன் வெளியீடு XXXII வெளிவரத் தொடங்கியது. ‘சுவடுகள்’ மாதாந்த செய்தி மலர் வெளிவரத் தொடங்கியது. செல்வி.ம.தரண்யா (தரம் 5) தேசிய ஒலிம்பியாட் போட்டிக்காகத் தெரிவு செய்யப் பட்டார்.

2008:  தேசிய மட்டத் தட்டெறிதல் (19வயது) 2ம் இடம் செல்வன்.ம.பார்த்தீபன். தேசிய மட்டப் பேச்சுப் போட்டிப்பிரிவு ii 3ம் இடம் ம.தரண்யா. தேசிய துடுப்பாட்டப் பயிற்சி அணிக்காக செல்வன். வி.கபில்தேவ் தெரிவு செய்யப்பட்டார். இலங்கைத் துடுப்பாட்டத்தில் 13,15,17 வயதுப்பிரிவின் திறமை அடிப்படையில் Best of the North-2008 என்ற விருதும் 6 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரண ங்களும் கிடைக்கப்பெற்றன. 21 வருடங்களின் பின் 19 வயது உதைபந்தாட் அணி மாவட்டச் சம்பியனாகத் தெரிவாகியது. பெண்கள் கரப்பந்தாட்ட அணி தொடக்கப்பட்ட இந்த ஆண்டே 17 வயது மாவட்டச் சம்பியனாகியது. விஞ்ஞான மன்றத்தால் முதலாவது Discovery சஞ்சிகை வெளியிடப்பட்டது. சதுரங்கக் கழகத்தால் நூற்றாண்டு முன்னோடிப் போட்டி நடாத்தப்பட்டது. மயிலங்கூடலூர் திரு.பி.நடராஜாவால் தொகுக்கப்பட்ட மகாஜனாவின் குழந்தைக் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. பெண் குருளைச் சாரணிய அணி முதலாவது தமிழ்ப் பாடசாலை அணியாகப் பதிவு செய்யப்பட்டது. செல்வி.ஆ.அனுஷியா மக்கள் வங்கியானால் சாதனையாளர்  விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

2009:  தமிழறிவு தேசியமட்டம் முதலாமிடம் செல்விகள் சி.ரோபிதா, இ.ஸ்ரீவாணி, ஐ.தனுசா, இ.கௌதமி, ம.நிலானி Junior National Champion 2009 தட்டெறிதல் முதலாமிடம் செல்வன். ம.பார்த்தீபன்.National Bravery Award – வெ.வைஷ்ணவி, நி.சர்மி, அ.தர்மிகா, யோ.கார்த்திகா பெற்றுக் கொண்டனர். கொழும்பில் அரவிந்த டி சில்வா Foundation பயிற்சி முகாமிற்கு சி.டிலக்சன், ச.கோகுலன், க.கபிலன் அழைக்கப்பட்டிருந்தனர், 25 வயதுப்பிரிவில் செல்வன்கள் கி.திலக்சன், ஜெ.ஜெனந்தன், கு.மோசிகரன் ஆகியோர் Best of 2000 விருதைப் பெற்றனர். இதில் செல்வன்.கி. திலக்சன் Best player of the North என்ற சிறப்பு விருதைப் பெற்றார். மூன்றலகு உயர்தர விஞ்ஞான ஆய்வுகூடம் NECORD கட்டித்தரப்பட்டது. நூற்றாண்டுக்கு முன்னோடியாக பழைய மாணவரும் மூத்த ஆசிரியருமான திரு. சி.சுந்தரமூர்த்தி (99 வயது) SDS ஆல் கௌரவிக்கப்பட்டார். அபிவிருத்தி நிதியத்தினால் GTZ கட்டட மேல்மாடி விடுதிச்சாலைப் பகுதி, ஆரம்பப் பிரிவு மேல்மாடி, நடன கூடம், சித்திரகூடம், விஷேட கல்வியறை, சமையலறை, சாப்பாட்டுக்கூடம், மேற்குப்பக்க மூன்று வகுப்பறைகள் போன்றவை மூடிய வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்பட்டன. பிரான்ஸ் OSA 300 சோடி கதிரை, மேசை தந்துள்ளார்கள்.

2010:  தேசிய பாடசாலைகளுக்கான மெய்வல்லுநர் போட்டியில் செல்வன் தே.மோகுநாத் கோலூன்றிப் பாய்தலில் முதலாம் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

செல்வி.பா.புகழரசி தேசிய கரப்பந்தாட்ட அணியில் பங்கு பற்றி மலேசியா சென்றார்.

Junior National Champion 2010 செல்வன். தே.மோகுநாத் கோலுன்றிப் பாய்தல் முதலாம் இடம். சதுரங்கம் பெண்கள் அணி 19 வயது பிரிவு தொடர்ந்து 10 வருடங்களாக வலயமட்டப் போட்டியில் முதலிடம் பெற்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலாக 22 மாணவர்கள் சித்திபெற்றனர்.

கல்லூரியின் இணையத்தளம் (www.Mahajanacollege.net) ஆரம்பிக்கப்பட்டது.

நூற்றாண்டு முதல் நிகழ்வாக முன்னாள் ஆசிரியர்கள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். கொழும்பு OSAயின் ஒழுங்கமைப்பில் நூற்றாண்டு முத்திரை கல்லூரியில் வெளியிடப்பட்டது. மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்களின்  சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிபர் சின்னப்பாவின் சிலை திறந்து வைக்கப் பட்டது . பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் கோயில் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகமும் மேற்கொள்ளப்பட்டது. OPSA UKயினால் புனரமைப்புச் செய்யப்பட்ட நவீன நூலகம் பழைய ஆய்வுகூடத் தொகுதியில் திறந்து வைக்கப் பட்டது. கனடா OSAஆல் 40 கணினிகள் கொண்ட கணினி அலகு உருவாக்கப்படவுள்ளது. நியூசிலாந்துப் பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாஜனமாதா எனும் வரலாற்றுக் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாகாணக் கல்வித்திணைக்கள உதவியுடன் பாடசாலை முழுவதும் மின் வசதியும் ஒலி அமைப்பும் செய்து தரப்பட்டது. சிறுவர் கணினிக்கூடம் அமைக்கப்பட்டது. ஆண்டு 1 இரு வகுப்பறைகளும், மேற்காக இரு வகுப்பறைகளும் மூடி அமைத்தலுடன் எல்லை மதில்களும் பூர்த்தி யாக்கப்பட்டது. ஆண்கள் சைக்கிள் பாதுகாப்பு நிலையம், விளையாட்டு வீரர்களிற்கான குளியலறை, ஆசிரியர்களிற்கான மலசலகூடம் முற்றாகப் புனரமைக்கப்பட்டு பாடசாலை முழுவதும் புனரமைக்கப்ட்டு, வர்ணம் பூசப்பட்டு ஜயரத்தினம் மண்டபமும் புனரமைக்கப்பட்டது.

மகாஜனக் கவிதை வெளியிடப்பட்டது. நூற்றாண்டு விழாக்கள் October 12,13,14ம் திகதிகளில் இடம்பெற்றது

 

 

************************************************************************

Mahajana Time Line

 

The timeline table was created by Colombo OSA. There may be few items missing. We will be pleased if you could correct them with the evidence.

Please forward your suggestions by email

 

1910 OCTOBER 1910 Mahajana English High School is founded by Pavalar T. A.Thuraiappahpillai

 

1912 Mahajana moves to its current location (in August)

 

1913 A Board of Examinations is established.

 

1916 Mahajana is inspected for the first time by the Education           Department    in April. Mahajanan pupils are admitted to appear in the  General Examinations

 

1918 A heavy storm flattens the class rooms of the school

 

1919 A T-shaped new building is constructed

Mahajana receives the government grants for the first time

 

1926 Saraswathy Vidyalayam is established for the female students in the same premises

 

1929 Founder Mr. T.A. Thuraiappahpilla passes away.

Mr. K. Chinnappah becomes the Head Teacher of the school.

 

1935 Mahajana celebrates the Silver Jubilee

 

1936 Scouting starts in Mahajana

 

1943 Mahajana opens the school for female education with 12 pupils.

Ms Rasamalar Chinniah serves as Mahajana’s first female teacher

 

1945 Mr. T. T. Jeyaratnam is installed as the Head Teacher (3/9/1945)

Name of the School is changed to Mahajana College.

1946 Mahajana Logo and the motto (Know Thyself) are designed

Mahajana enters the Jaffna School Sports Association (JSSA) soccer tournament for the first time Facilities are provided to teach Physics, Chemistry and Biology

 

1947 Mahajana is raised to Grade II

 

1948 HSC Science classes are formed.

 

1949 Mahajana is raised to Grade I

 

1950 An attempt is made to raise funds by bringing film stars from India

 

1951 The College anthem and the flag song take shape, both written by Vidhwan Naa. Sivapathasuntharanar

1952 The new Physics laboratory is declared open

 

1953 The new Chemistry laboratory is declared open

 

1954 A very big fund raising carnival is organised at the Jaffna Esplanade

The college hostel is started at a modest scale with 6 students

 

1955 Foundation is laid for the Golden Jubilee Block (later named as

Thuraiappahpillai Memorial Block) Mahajana are the runners-up at the JSSA athletic meet Mahajana wins the JSSA Second Eleven Soccer Championship

 

1956 Mahajana commences sponsoring festivals at Maviddapuram Kanthasamy Temple and Thiruketheeswaram Temple

Mahajana are the runners-up at the JSSA athletic meet

 

1958 Extension of playground. The workshop is further extended and a room is provided for Dance

 

1959 Mahajana comes third in the Inter Collegiate Athletic Meet conducted by JSSA

 

1960 The College celebrates Golden Jubilee. The number of pupils exceeds 1800 Golden Jubilee is celebrated with the opening of Thuraiappapillai Memorial Block by the Vice Chancellor Sir Nicholas Attigalle

A temple for Sivahamai Sametha Anantha Nadarajar is consecrated in the College Premises

 

1961 Mahajana is the Second Eleven Champion and First Eleven Finalists in Soccer. College is raised to Super Grade status

 

1962 Mahajana once again becomes the Second Eleven Champions in Soccer.Three of the Mahajanan Scouts represent Ceylon at the Asian Scout Jamboree held in Tokyo The College is vested in the Crown as from the 1st February and becomes a Government Institution for all intents and purposes

 

1963 Intermediate Girls Physical Training (PT) Squad ranks first in the All Island Contest conducted by the Department of Education and receives the Trophy from the Governor General. Thirty-eight students enter the University of Ceylon, the highest for any institution in Jaffna that year. Of these, ten are for the Faculty of Medicine, the highest for any institution in Jaffna that year. Mahajana Group Scout Master Mr CS Subramaniam and Scout K Vishnubala represent Ceylon at the Eleventh World Jumboree held in Greece

 

1964 Mahajana becomes the First Eleven Champions in soccer

 

1965 Mahajana is the Runner-Up again at the JSSA Athletics Meet.

Mahajana wins the Cricket Championship in the Northern Province as an

unbeaten team Mahajana wins both senior and junior championships in the tournament conducted by the Jaffna Schools Hockey Association.

Mahajana comes first in the All-island Tamil Drama Competition conducted by the Ceylon Arts Council.

 

1966 Mahajana wins the Second Eleven and Third Eleven Championships in soccer Hockey captain of Mahajana team leads the All Ceylon School Boys’ Team which toured to India. Mahajana is the Runner-Up again at the JSSA Athletics Meet. Mahajana wins first in the All-island Tamil Drama Competition by the Ceylon Arts Council. Mahajana is the Runner-up in the All Island Schools’ Science Quiz Championship.

 

1967 Mahajana comes first in the All-island Tamil Drama Competition conducted by the Ceylon Arts Council

 

1968 Mahajana wins in the All-island Tamil Drama Competition conducted by theCeylon Arts Council. Mahajana is the champion of the First Eleven soccer championship

 

1969 Mahajana wins in the All-island Tamil Drama Competition conducted by the Ceylon Arts Council. Mahajana is the champion of the First Eleven soccer championship

 

1970 Mahajana celebrates the Diamond Jubilee Mahajana is the champion of the First Eleven soccer championship Mahajana wins the Championship at the All-Ceylon Schools Soccer Tournament conducted by the Ceylon School Football Association and is awarded the Sir John Tarbat Shield. Mahajana wins in the All Island Schools’ Science Quiz Championship Service of Principal  Mr. T. T. Jeyaratnam, the Architect of Mahajana, reties from the service.

 

1971 Mr. M. Mahadevan becomes the Principal of the College (January 01)

 

1972 Mr. P.S. Kumaraswamy becomes the Principal of the College (June 06) Hundredth Year Celebration for the Founder

 

1973 Mr. S. Sivasubramaniam is appointed as the Principal (July 11)

 

1976 Mr. P. Kanagasabapathy becomes the Principanl Former Principal

Mr. T.T. Jeyaratnam passes away (October 29).

 

1978 Mahajana wins the Championship at the All-Ceylon Schools Soccer Tournament conducted by the Ceylon School Football Association and is awarded the SINGER Shield.

 

1979 Brahmasri K.S. Rathneswara Iyar becomes the Principal (Dec. 01 )

 

1980 Mr. Pon Somasuntharam is appointed as the Principal (July 01)

 

1983 Mr. T. Shanmugasuntharam becomes the Principal (June 12)

 

1984 Mr. V. Kanthaiah is appointed as the Principal (August 01)

 

1985 Mr. K. Nagarajah becomes the Principal (December 04)

 

1990 Mahajana temporarily moves to Alaveddy Arunothaya College

 

1991 Mahajana temporarily moves to Pandatharippu Girls College

1993 Mahajana classes are conducted at Kondavil Niru (private) Tuition Centre

 

1994 Temporary cottages are established at Maruthanarmadam to conduct full-time classes for Mahajana College

 

1998 Mr. P. Suntharalingam is appointed as the Principal (November 29)

 

1999 On September 15th Mahajana College moved back to the original location at Ambanai.

 

2006 Mrs Sivamalar Ananthasyanan is appointed as the Principal (Oct 24)

 

வெல்லுக மகாஜன மாதா

Events