அதிபர் ஜயரத்தினம் பிறந்ததினவிழா அழைப்பிதழ்
Mahajana has received National Awards click here
மகாஜன, ஹென்றிஸ் அணிகள் உதைபந்தாட்டத்தில் சம்பியன் ……மேலும்
தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் – 2013
அதிபர் தெ.து.ஜயரத்தினம் நூறாவது பிறந்ததினவிழா – 2013
அதிபர் தெ.து.ஜயரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்ததினவிழாவை முன்னிட்டு நடார்த்தப்படுகின்ற நிகழ்வுகள்
நிறுவியவர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும்.
யா/மகாஜனக்கல்லூரியின் ஸ்தாபகர் பாவலர் திரு.தெ.அ.துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவு தினமான ஜுன் மாதம் 24 ஆம் திகதியில் நிறுவியவர் நினைவு தினமும், தரம் 09 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்று வருகின்றது.
நிறுவியவர் நினைவுதினமும் பரிசளிப்பு விழாவும்- 2013
அழைப்பிதழ்
24.07.2013 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.கு.வேல்சிவானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற 84 ஆவது நிறுவியவர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும் நிகழ்விற்கு பிரதம் விருந்தினராக கொழும்பு பல்கலைக்கழக கல்விப்பீடத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களும் அவரது பாரியார் திருமதி.சா.சந்திரசேகரன் அவர்களும், விசேட விருந்தினர்களாக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.செ.சந்திரராஜா அவர்களும், கனடா பழைய மாணவர் சங்கத்தலைவர் உற்பத்திப் பொறியியலாளர் மகாஜனன் திரு.க.ஜெயந்திரன் அவர்களும், கௌரவ அதிதியாக தெல்லிப்பழைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.சு.சண்முககுலகுமாரன் அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் நிறுவியவர் நினைவுப் பேருரையை ‘பாவலர் துரையப்பாபிள்ளையின் சமுதாய நோக்கு’ என்ற கருப் பொருளில் கிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் மகாஜனன் கலாநிதி.சி.சிவநிர்த்தானந்தா அவர்களும், ஆசியுரையை முன்னாள் அதிபரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கௌரவ கலாநிதி திரு.ஆறு.திருமுருகன் அவர்களும் நிகழ்த்தினர். பிரதம விருந்தினரின் பாரியார் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார். புழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் மகாஜனன் திரு.இ.ஸ்ரீதரன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
பரிசளிப்பு விழா அறிக்கை
நிறுவியவர் நினைவுப் பேருரை – 2013
நிறுவியவர் நினைவுதினமும் பரிசளிப்பு விழாவும்- 2013 புகைப்படங்கள் இங்கு
நவமகாஜன சிற்பி அமரர்.தெ.து.ஜயரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்ததின விழாவை சிறப்பாகக் கொண்டாடும் முகமாக விழாச்சபை அமைக்கும் விசேட கூட்டம் மேலும்
நவ மகாஜன சிற்பி அமரர் தெ.து.ஜயரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்ததின விழாவை கொண்டாடும் முகமாக நூறாவது பிறந்ததின விழா அமைப்புக் குழுவை ஏற்ப்பாடு செய்வதற்கான விசேட கூட்ட அழைப்பு புதுவருடம் அன்று (14.04.2013) உதயன் பத்திரிகையில் வெளியாகிய செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியில் (தேசியத்தில்) எங்கள் பாடசாலை மாணவி ஜெ.அனித்தா கோலூன்றிப் பாய்தலில் 17 வயது பெண்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
க.பொ.த (சா.த) 2012 ஆண்டிற்கான பெறுபேறுகள்
Battle of the Heroes ‘வீரர்களின் போர்’ பத்திரிகையில் வெளியான செய்தி மற்றும் படங்களின் தொகுப்பு….மேலும் Battle of the Heroes ‘வீரர்களின் போர்’ இரண்டாவது சுற்றில் ஸ்கந்தவரோதயா 79 ஓட்ங்களும் மகாஜன அணி 93 ஓட்டங்களும் பெற்று மகாஜன அணி இரு சுற்றுகளிலும் முன்னிலையில் நின்று இவ்வருட வீரர்களின் போர் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியது. எமது அதிபர், ஆசிரியர்கள், அணியினை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அணிவீரர்கள் அனைவரையும் வாழ்த்துகின்றோம். மேலும்
13வது ‘வீரர்களின் போர்’ முதல் சுற்றில் ஸ்கந்தவரோதயா 63 ஓட்ங்களும் மகாஜன அணி 126 ஓட்டங்களும் பெற்று மகாஜன அணி முன்னிலையில் இருக்கின்றது. தொடர்ந்து இரண்டாவது சுற்று ஆரம்பமாகி நடைபெறுகின்றது. மேலும்
க.பொ.த (சா.த) 2012 ஆண்டிற்கான பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியது. கி.விஷ்ணுகா 9A, ஜெ.மயூரன் 8A,C, ஆ.கிருஷா 8A,C, வா.விதுஷா 8A,C மேலும் பல மாணவர்களின் பெறுபேறுகள்…….இங்கு
யா/மகாஜனக் கல்லூரிக்கும் யா/ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான 13வது ‘வீரர்களின் போர்’ மகாஜன அணி வீரர்கள்
ஆசிய சிறுமிகள் கால்பந்தாட்டத்திற்கான இலங்கை அணியில் மகாஜனக்கல்லூரி மாணவி மேலும்…
கனிஷ்ட பிரிவு இல்லமெய்வல்லுனர் போட்டி 2013 நிகழ்வுகளின் பதிவுகள் இங்கு….
சிரேஷ்ட பிரிவு இல்லமெய்வல்லுனர் போட்டி 2013 நிகழ்வுகளின் பதிவுகள் இங்கு…..
சென்றவருடம் நடைபெற்ற ஜெயரத்தினம் நினைவு தின பதிவுகள் இங்கு….
இவ்வாண்டு இல்ல விளையாட்டுப்போட்டிகள் 08, 09 -02- 2013 அன்று..
இவ்வாண்டு வந்த A/L பரீட்சை பெறுபேறுகளின்படி மருத்துவத்துறைக்கு இரு மாணவர்களும், பொறியியல்த்துறைக்கு மூன்று மாணவர்களும், உயிரியல் துறைக்கு ஐந்து மாணவர்களும், பௌதீக விஞ்ஞானத்துறைக்கு ஏழு மாணவர்களும், முகாமைத்துவத்துறைக்கு இரு மாணவர்களும், வர்த்தகத்துறைக்கு இருமாணவர்களும், கலைத்துறைக்கு எட்டு மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்க்கான வாய்ப்புக்கள் உண்டு. வலிகாமம் கல்வி வலயத்தில் 134 பாடசாலைகள் உண்டு. இதில் உயர்தர வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளில் எங்கள் கல்லூரியே முதல்த்தரமான சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. சில வருடங்களாக எங்கள் கல்லூரியில் இருந்து மருத்துவத்துறைக்கு மாணவர்கள் செல்லவில்லை. இவ்வாண்டு இருவர் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர். யாழ்மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேற்றின் படி வேம்படி தேசிய பாடசாலை முதலாம் இடத்திலும் யாழ் இந்துக்கல்லூரி இரண்டாம் இடத்திலும் ஹாட்லி கல்லூரி மூன்றாம் இடத்திலும் எங்கள் கல்லூரி ஐந்தாம் இடத்திலும் உள்ளது. பெறுபேறுகளுக்கு இங்கு
தேசியமட்டமெய்வல்லுனர் போட்டியின் முடிவுகள் சில இங்கு
கோட்டமட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனா சம்பியன் ….மேலும்
எம்மை வாழ வைத்தவர்கள் நூல் வெளியீட்டு விழா… விபரங்களுக்கு
தரம் 5 புலமைப்பரீட்சை-2012 இல் 18 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை… விபரங்களுக்கு
மகாஐனா மாவட்டமட்ட சம்பியன் மாவட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 13 வயதுப் பிரிவு பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் மகாஜனக்கல்லூரி வெற்றிபெற்று மாவட்டமட்ட சம்பியனானது.
நூற்றாண்டு நினைவாக கல்லூரியில் வெளியிடப்பட்ட “மகாஜனமாதா” காணொளித் தொகுப்பு.